சூயஸ் கால்வாய் டிராபிக்கால் சிக்கல்.. 20 கண்டெய்னர் நிறைய "பலான மேட்டர்!" பாவம்தான் ஐரோப்பிய நாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூயஸ் கால்வாயில் , 2 லட்சம் மெட்ரிக் டன் எடை கொண்ட "எவர் கிவன்" கப்பல் சிக்கிக்கொண்டு டிராபிக் ஜாம் ஏற்படுத்தியதால் பல மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல வேண்டிய முக்கிய பொருட்கள் தடைபட்டன.

காபி, டாய்லெட் பேப்பர், செக்ஸ் பொம்மைகள், பர்னிச்சர் என தடைபட்ட பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

மார்ச் 23ஆம் தேதி சூயஸ் கால்வாயை கடந்தபோது எவர்கிவன் கப்பல் கால்வாய் குறுக்குவாட்டில் திரும்பிவிட்டது. அப்போது வீசிய பெரும், மணல் புயல் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.

2 லட்சம் டன் எடை கொண்ட கப்பல்

2 லட்சம் டன் எடை கொண்ட கப்பல்

சீனாவிலிருந்து நெதர்லாந்துக்கு பல்வேறு சரக்குகளை ஏற்றிக்கொண்டு 2 லட்சம் மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த கப்பல் சென்று கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த வழியாக பிற கப்பல்கள் கடந்து செல்ல முடியவில்லை. உலக வர்த்தகத்தில் சுமார் 12% இந்த கால்வாய் வழியாக நடைபெறுவதாக கூறுகிறது புள்ளிவிபரம்.

எகிப்து பராமரிப்பு

எகிப்து பராமரிப்பு

எகிப்து நாடு இதற்காக ஒரு ஆணையம் ஏற்படுத்தி அதுதான் சூயஸ் கால்வாய் பராமரிப்பு, வருவாய் உள்ளிட்ட விஷயங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை காரணமாக எகிப்தில் சூயஸ் கால்வாய் ஆணையத்துக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. பிறநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது. சில நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கு கூட இது காரணமாக அமைந்தது.

மீண்டது கப்பல்

மீண்டது கப்பல்

முழு நிலவு, காரணமாக, கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு மிகுந்த அலை போன்றவைகள், கப்பலை ஒரு வாரத்தில் மீட்க உதவியது . இதையடுத்து கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், இந்த கப்பல் விபத்து காரணமாக எந்த பொருட்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது தொடர்பான பட்டியல் வெளியே வந்துள்ளது.

காபி சப்ளை

காபி சப்ளை

சூயஸ் கால்வாய் பிரச்சினை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது காபி சப்ளை என்று கூறப்படுகிறது. நெஸ்கபே இன்ஸ்டன்ட் காபி தூள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் செல்வது தடைபட்டு இருந்ததன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அடுத்த சில நாட்களுக்கு காபித் தூள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது . வியட்நாம் நாட்டில் இருந்து பெருமளவு இதுபோன்ற காபி மூலப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சூயஸ் கால்வாய் வழியாக பயணம் செய்ய வேண்டி இருந்தது ஆனால் ஒரு வாரம் அது தடைப்பட்டது.

"பலான டாய்"

இதில் பெரும்பாலானோர் கவனிக்க தவறியது, ஆனால் முக்கியமான ஒரு வணிகம் என்றால் செக்ஸ் டாய்ஸ் சப்ளை ஆகும். எவர் கிவன் கப்பல் விபத்து காரணமாக செக்ஸ் பொம்மைகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் அந்த வழியைப் பயன்படுத்த முடியாமல் டிராபிக் ஜாம் பிரச்சினையில் சிக்கிக் கொண்டது என்கிறார்கள். அந்த கப்பலில் 20 கண்டெய்னர்கள் நிறைய செக்ஸ் டாய்ஸ் இருந்தன. மேற்கத்திய பெண்கள் பயன்படுத்தும் வைப்ரேட்டர்கள், ரப்பரால் செய்யப்பட்ட செயற்கை ஆணுறுப்பு, ஆண்கள் சிலர் சுய இன்பத்திற்கு பயன்படுத்தக்கூடிய பொம்மைகள் உள்ளிட்டவை அந்த கண்டெய்னரில் இருந்ததாக ஐரோப்பாவை சேர்ந்த முன்னணி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவற்றின் வரத்து பாதிக்கப்பட்டதால், இருக்கும் டாஸ்ய் விலை ஏறிப்போச்சாம்.

"ஆய்" பிரச்சினை

இன்னொரு தர்ம சங்கடம் என்னவென்றால், டாய்லெட் பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல், இந்த ட்ராபிக் ஜாம் பிரச்சினையால் சிக்கிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் டாய்லெட் பேப்பர் விலை உயரும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

துறைமுகத்தில் டிராபிக்

துறைமுகத்தில் டிராபிக்

வீட்டு உபயோக பர்னிச்சர் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பல்கள் பல இந்த டிராபிக் பிரச்சனைகள் சிக்கியதால் தெற்கு கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பர்னிச்சர்கள் சப்ளை பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொத்தமாக கப்பல்கள் இப்போது பயணப்பட்டு ஒரே நேரத்தில் ஐரோப்பிய துறைமுகங்களை அடையும்போது துறைமுகங்களில் நெரிசல் ஏற்படும். எனவே, கப்பல்கள் வரிசைக்கிரமமாக துறைமுகத்தை அடையும் என்பதால் பொருட்கள் உரிய இடங்களுக்கு சென்று சேர்வதில் இன்னமும் காலதாமதம் ஏற்பட தான் செய்யும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+