சர்க்கரை அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. இந்த 3 வேலைகளை முடிக்க 1 நாள்தான் இருக்கு! தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது ரேஷன் கடைகள்தான் என்பதை நம்மால் மறுக்க முடியாது.. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட உணவுத் தேவைகளுக்காக ரேஷன் கடையையே நம்பியிருக்கிறார்கள்.. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளையும் மாற்றங்களையும் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது.. அதை பற்றி பார்ப்போம்.
தமிழக அரசு சில மாற்றங்களை குடும்ப அட்டைதாரர்களுக்காக கொண்டு வந்துள்ளது.. இந்த மாற்றங்களைச் சரியாகப் பின்பற்றாத குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற தகவல் தற்போது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..

முதல் விஷயம்
நீண்ட நாட்களாக ரேஷன் கடைக்கு வராத மற்றும் பொருட்கள் வாங்காத கார்டுகளைக் கண்டறிந்து அவற்றை செயலற்ற நிலைக்கு மாற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..
குறிப்பாக 6 மாதங்களுக்கு மேல் ஒருமுறை கூட பொருட்கள் வாங்காத கார்டுகள் போலியானவை எனக் கருதப்பட்டு ரத்து செய்யப்படலாம்.. ஏப்ரல் 1 முதல் அத்தகைய கார்டுதாரர்கள் மீண்டும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து கார்டைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இல்லையெனில், அடுத்தடுத்த மாதங்களில் இலவச அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படாது என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இரண்டாவது விஷயம்
ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.. பல குடும்பங்களில் இறந்தவர்களின் பெயர்கள் அல்லது வெளியூர் சென்றவர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன.
ஏப்ரல் 1 முதல் இத்தகைய குளறுபடிகளைச் சரிசெய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.. ஒருவேளை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், பொருட்கள் வாங்கும் போது பயோமெட்ரிக் முறையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.. இது தொடர்பான மெசேஜ்கள் ஏற்கனவே பலரது மொபைல் எண்களுக்கு வரத் தொடங்கியுள்ளன..
மூன்றாவது விஷயம்
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடையைச் சரியாக உறுதி செய்யப் புதிய டிஜிட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.. பொருட்கள் வாங்கிய பிறகு ஒவ்வொரு கார்டுதாரருக்கும் உடனடியாக மொபைலில் ரசீது வருவது உறுதி செய்யப்படும்..
இது தவிர, கோடைக்காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்திலும் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.. இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் பொருட்கள் போய்ச் சேருவதை உறுதி செய்யவும் கொண்டு வரப்பட்டுள்ளன..!!!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications