சென்னை ஐஐடியில் தொடர்கதையாகும் தற்கொலைகள்..நீதி கேட்டு விடிய விடிய மாணவர்கள் போராட்டம்
சென்னை: ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணமாகும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐஐடி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐஐடியில் சீட் கிடைத்து படிக்க வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவு. நுழைவுத்தேர்வு எழுதவே ஆண்டுக்கணக்கில் படித்து தேர்வு எழுதி ஐஐடியில் படிக்க சேருவார்கள் மாணவர்கள். தங்களின் வாழ்நாள் லட்சியம் நிறைவேறி விட்டதாகவே உணர்வார்கள் மாணவர்கள். அதே நேரத்தில் ஐஐடியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் பயிலும் பல மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2016ல் தொடங்கி தற்போது வரை 12 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016ம் ஆண்டு மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 3 பேர் மாணவர்கள். சென்னை ஐஐடியில் கடந்த 21ஆம் ஆண்டு பாதி எரிந்த நிலையில் ஒரு மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கேரளாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதே போன்று கடந்த 2018ஆம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த மாணவர், வருகை பதிவேட்டில் பற்றாக்குறை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மேலும் ஒரு ஆய்வு மாணவர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதுகலை தொழில்நுட்ப மாணவர் ஆகியோர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஒடிசா மாணவர் தற்கொலை நடந்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 12 பேர் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஐஐடி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை வழக்கைத் தொடர்ந்து, இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர மாணவர் அமைப்பான சிந்தாபார் தனது சமீபத்திய ட்வீட்டில், "சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து ஏழு நாட்கள் ஆகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் வந்த செய்திகளின்படி, நிறுவனத்தால் அமைக்கப்பட்ட உள் விசாரணைக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மேலும் சச்சின் குமாருக்கு நீதி கோரி, "ஏப்ரல் 6 ஆம் தேதி, சச்சினின் சகோதரர் பாவேஷ் குமார், சச்சின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தக் கோரி இயக்குனருக்கு எழுத்துப்பூர்வ புகார் அனுப்பியிருந்தார். புகாரின்படி, வழிகாட்டியின் நடத்தை சச்சினுக்கு மன அழுத்தத்திற்கு வழிவகுத்த பல நிகழ்வுகள் உள்ளன.
சச்சின் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருப்பதை நன்கு அறிந்திருந்தும் சச்சினின் வழிகாட்டி அவரை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினார். கடந்த 31ஆம் தேதி காலை தனது பேராசிரியரை சச்சின் சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர் தனது அறைக்குச் சென்று வாட்ஸ்அப்பில் "மன்னிக்கவும், போதுமானதாக இல்லை" என்று ஸ்டேட்டஸ் போட்டதாகவும் புகார் கூறுகிறது. பின்னர் மதியம், அவர் இறந்து கிடந்தார்" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
சச்சின் சகோதரர் கூறிய குற்றச்சாட்டுகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறிய சிந்தாபார், "புகார் தொடர்பாக, தற்போது நடைபெற்று வரும் உள் விசாரணையில் சச்சினின் சகோதரர் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று சிந்தாபார் கருதுகிறது.
ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி சச்சின் குமார் ஜெயின் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐஐடி இயக்குனரிடம் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே சச்சினின் தற்கொலைக்கு காரணம் பேராசிரியர்கள்தான் என்று ஐஐடியில் பயிலும் சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவனின் தற்கொலைக்கு நீதி வேண்டும் என்றும் சக மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்கொலைகள் குறித்து ஊடகங்களில் பேசினால் மதிப்பெண்களை குறைத்து விடுவோம் என்று பேராசிரியர்கள் மிரட்டுவதாகவும் கூறி ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் தற்கொலைகள் தொடர்கதையாகி வருவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை மட்டுமே தீர்வாகாது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களின் தற்கொலைகள் குறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், 'கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய காலக்கட்டம் ஐஐடிக்கு ஒரு சவாலான சூழலாக இருந்து வருகிறது. ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இத்தகைய சம்பவங்கள் குறித்து விசாரிக்க மாணவர் பிரதிநிதிகள் உட்பட நிலையான விசாரணைக் குழுவும் சமீபத்தில் அமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications