சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது: ரஜினி காந்த் இரங்கல்
Recommended Video
சென்னை: சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என நடிகர் ரஜினி காந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
அவனை மீட்க கடந்த ஐந்து நாட்களாக நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு உடலைத்தான் மீட்பு படையினரால் மீட்க முடிந்தது.
சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2019
சுஜித்தின் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் பலரும் சோகத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். திரையுலக பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ரஜினி காந்த் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications