செல்வமகள், PPF முதல் அஞ்சல் சேமிப்பு திட்டம் வரை… மத்திய அரசின் வட்டி அப்டேட்.. புத்தாண்டு சர்ப்ரைஸ்
சென்னை: 2026 ம் ஆண்டு தொடங்கியதுமே, பணத்தை சேமித்து வைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும், ஓய்வு பெற்ற வயதானவர்களுக்கும் ஒரு நிம்மதியான தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது... அதாவது, அஞ்சலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்துதான் அந்த தகவல் வெளியாகி உள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
அஞ்சல் சேமிப்புகள் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று வருகின்றன.. காரணம், அஞ்சல் சேமிப்புகள் அரசு உத்தரவாதம் கொண்டவை என்பதால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது... வங்கிகளை விட பல திட்டங்களில் அதிக வட்டி மற்றும் நிலையான வருமானம் கிடைக்கிறது...

அஞ்சல் சேமிப்பு திட்டங்கள்
எனவேதான், கிராமம் முதல் நகரம் வரை எளிதாக அணுகலாம் என்பதால் எல்லா தரப்பு மக்களும் இதை தேர்ந்தெடுக்கிறார்கள்.
பொதுவாக அரசு, ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒருமுறை, சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை உயர்த்துமா, குறைக்குமா அல்லது அதே வட்டி விகிதத்தில் வைக்குமா என்றெல்லாம் முடிவு செய்யும்...
வட்டி விகிதம், சிறு சேமிப்பு
அந்தவகையில், இந்த முறை சந்தையில் உள்ள பணவீக்கம், வங்கிகளின் வட்டி நிலை, பொருளாதார சூழல் போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, வட்டியை மாற்றாமல் தொடர்வதே நல்லது என்று அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது சிறு சேமிப்பு திட்டங்களின் விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது.. ஜனவரி முதல் மார்ச் 2026 வரை இருக்கும் இந்த மூன்று மாதங்களிலும், கடந்த காலாண்டில் இருந்த அதே வட்டி விகிதங்களே தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியாக அறிவித்திருக்கிறது..
இதனால் ஏற்கனவே இந்த திட்டங்களில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல், வருமானம் தொடர்ந்து கிடைக்கும்.
வருங்கால வைப்பு நிதி PPF
உதாரணமாக, பல நடுத்தர குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்திற்காக பணம் சேமித்து வைக்கும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF திட்டத்திற்கு, இதுவரை இருந்த 7.1 சதவீத வட்டியே தொடரப்போகிறது..
அதேபோல், அஞ்சலகத்தில் உள்ள சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கும் 4 சதவீத வட்டி தொடர்ந்து வழங்கப்படும்... இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படி வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடர்வது இது 7வது முறையாகும். இதனால் இந்த திட்டங்கள் எவ்வளவு நிலையானவை, பாதுகாப்பானவை என்பதும் வாடிக்கையாளர்களுக்கு புலப்படுகிறது..
செல்வமகள் சேமிப்பு திட்டம்
அதேபோல பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமணத்திற்காக பெற்றோர்கள் சேமிக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கும், ஓய்வுபெற்ற முதியவர்கள் தங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்காக பயன்படுத்தும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கும் அதிகபட்சமாக 8.2 சதவீத வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.
இது வங்கிகளில் கிடைக்கும் வட்டியைவிட அதிகமாக இருப்பதால், இந்த திட்டங்கள் அனைத்துமே மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளன.
அதேபோல், நீண்டகால முதலீடாக கருதப்படும் கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற திட்டங்களிலும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இவை அனைத்தும் அரசு உத்தரவாதம் கொண்ட திட்டங்கள் என்பதால், பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு கிடைக்கிறது.
மத்திய அரசு புத்தாண்டு சர்ப்ரைஸ்
மொத்தத்தில் உங்கள் சேமிப்புகள் பாதுகாப்பாகவே இருக்கின்றன, வட்டி குறையவில்லை, நீங்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்பதே மத்திய அரசு தந்துள்ள நம்பிக்கை செய்தியாகும்.. எனவேதான், இந்த அறிவிப்பு கிராமப்புற மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், முதியவர்களுக்கும் ஒரு நிம்மதியான செய்தியாக பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications