Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் பேச்சில் முன்னேற்றம்.. பஞ்ச் பேசாமல் பாயிண்ட் பிடித்து பேச ஆரம்பித்துவிட்டார்- சுமந்த் ராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாமக்கல்லில் இன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவரும் நடிகருமான விஜய், தனது பேச்சில் முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தெரிவித்துள்ளார். திரைப்பட வசனம் போல் இல்லாமல் பாயிண்ட்டை பிடித்து பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Namakkal Vijay speech

அரசியலுக்கு வந்தால் அவர்களது உரை என்பது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படும். பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் உரைகள் சுவாரஸ்யமாக இருக்கும். நடுநடுவே நக்கல் நய்யாண்டித்தனம் இருக்கும். இது எந்த மொழியில் பேசினாலும் மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும்.

அதற்காக ஏதோ சினிமா டயலாக் போல் மனப்பாடம் செய்து வைத்து படிக்கக் கூடாது. புள்ளி விவரங்களை மட்டுமே குறிப்பெடுத்து வைத்து பேசலாம். மற்றவை எல்லாம் பேச பேச தானே வந்துவிடும். இதற்கு பழக வேண்டும். அந்த வகையில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், என்ன பேச போகிறார், யாரை எதிர்த்து அரசியல் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்தது.

அந்த வகையில் அவர் பேசிய விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, பனையூரில் பல்வேறு தருணங்களில் பேசியது, பரந்தூர் விமான நிலைய போராட்ட மக்களிடையே பேசியது என எல்லாவற்றிலும் வழவழ கொழகொழ என இருந்தது. பெரும்பாலும் பஞ்ச்தான் இருந்தது.

கண்களை மூடிக் கொண்டு கேட்டால் விஜய்யின் திரைப்படத்தை பார்ப்பது போல் இருந்தது. அரசியல் படிக்க வேண்டும். அரசியலில் முதிர்ச்சி வேண்டும். பேச்சில் ஒரு முன்னேற்றம் வேண்டுமென திமுகவினர் கிண்டல் செய்து வந்தனர்.

கடந்த இரு வாரங்களாக நடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் விஜய் பேசியது செயற்கைத்தனமாக இருந்தது. நாகை மாவட்டத்தில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. "என்ன சிஎம் சார், என்னை மிரட்டி பார்க்கறீங்களா, நான் தனி ஆள் இல்லை" என விஜய் பேசியிருந்தார்.

மேலும் நாகையில் விஜய் பேசுகையில், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என்றார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்திருந்தார். அவர் கூறுகையில் "தவெக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது. நாகை மருத்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அது போல் நாகை மாவட்டத்தில் எந்த பணியும் நிறைவேறவில்லை என விஜய் பேசியதை அந்த தொகுதி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் மறுத்துள்ளார். ஷாநவாஸ் கூறுகையில் விஜய் பரப்புரையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என அவர் கட்சியினர்தான் மின்வாரியத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் விஜய்யோ அரசே திட்டமிட்டு மின்தடை செய்தது போல் குற்றம்சாட்டுகிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆனால் இன்று நாமக்கல்லில் நடந்த பிரச்சாரத்தில் விஜய்யிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. இதை அரசியல் விமர்சகர் சுமந்த்ராமன் விவரித்துள்ளார். அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜய் வேகமாக கற்றுக் கொண்டு விட்டார். அவருடைய பேச்சு இன்று நன்றாக இருந்தது. விஷயத்தை நேரடியாக சொல்லிவிட்டார். சினிமாவை போல் பஞ்ச் பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது ட்விட்டுக்கு நிறைய நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர். அதில் "விஜய் இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்க வில்லை, அப்படி இருக்கும் போது நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோமா" என தொண்டர்களிடம் கேட்கிறார். எனவே அவருடைய பேச்சில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது, அவரை போய் பாராட்டுகிறீரே என ஒரு நெட்டிசன் சொல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+