காரில் ஏசி போட்டாலும் கூலிங் ஆக ரொம்ப லேட் ஆகுதா.. இதை பாலோ பண்ணி பருங்க.. குளுகுளுன்னு மாறிடும்
சென்னை: கார்களில் ஏசி போட்டாலும் கூலிங் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிது என்றால் கீழ்க்கண்ட நடைமுறைகள ஃபாலோ செய்து பாருங்கள். உங்களது கார் விரைவில் கூலிங் ஆகிவிடும்.
கோடைக்காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வந்தால் வியர்வையிலேயே குளித்து விடும் அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே போகவே அஞ்சும் நிலை உள்ளது.

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் 100 டிகிரி என்கிற அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துவிட்டது. பல இடங்களில் வெயில் சதமடிக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயில் கடுமையாக இருக்க போகிறது. இதனால், வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம் என்று மக்கள் பரிதவிப்புடன் உள்ளனர்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்போது நடுத்தரவசதி மக்களிடமும் கொஞ்சம் கொஞ்சமாக கார் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், வெளியில் போகும் போது பலரும் கார்களில் பயணம் செய்வதை காண முடிகிறது. வெப்பம் வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் கார்களில் ஏசி பராமரிப்பு எப்படி மேற்கொள்வது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
கோடைக்காலங்களில் கார்களில் ஏசி போடாமல் பயணிக்கவே முடியாத நிலை இருக்கும். எனவே, கோடை காலம் துவங்கும் முன்பே கார்களில் ஏசி சரிவர இயங்குகிறதா என சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில், திடீரென ஏசி இயங்காமல் போனால், டிரைவர்களுக்கும் காரில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
எனவே, கோடைக்காலத்திற்கு முன்பாக சர்வீஸ் செய்து கொள்வது நல்லது..அதுபோக காரில் செல்லும் போது உடனடியாக ஏசி கூலிங் ஆக வேண்டும் என்றால் கீழ் கண்டவற்றை பின்பற்றுங்கள்:
* காரை எப்போதுமே ஷெட்டில் நிறுத்த முயற்சி செய்யுங்கள்.. சூரிய ஒளி படும் இடத்திற்கு கீழ் அப்படியே நிறுத்தினால் கேபினில் வெப்பம் அளவுக்கதிமாக இருக்கும்.
* காரை பார்க் செய்யும் போது ஜன்னல் கண்ணாடியை முழுவதுமாக மூடாமல், லேசாக திறந்து வைத்திருக்கவும். காருக்குள் காற்று சென்று வரும் வகையில் வழி ஏற்படுத்தி வைத்திருப்பது அவசியம் ஆகும்.
* எடுத்த உடனேயே முழு full blower mode- ல் ஏசியை ஆன் செய்ய வேண்டாம். ஏசியில் காற்று வரும் வேகத்தை மெதுவாக துவங்கி படிபடியாக கூட்டலாம்.
* ஏசி பில்டரை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
* ஏசி சரியாக இயங்குவதற்கு அதை ரெகுலராக இயக்க பயன்படுத்த வேண்டும். சிறிய தொலைவிற்கு சென்றால் கூட ஏசியை பயன்படுத்துவது நல்லது.
* ஏசி சரிவர கூலிங் ஆகவில்லை என்றால் உடனடியாக சர்வீஸ் செய்ய வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் உங்களது காரில் பயணம் செய்வது, கொடைக்கானலில் இருப்பது போன்ற உணர்வை தரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications