கோடை காலத்தை கூலாக கடந்திடலாம்... இந்த விஷயங்களை மறக்காம பின்பற்றுங்க - டாக்டர் ஒய். ஆர். மானக்சா
கோடை வெப்பத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அந்த நோய்களில் இருந்து தப்பிக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார் டாக்டர் ஒய். ஆர். மானக்சா.
திருநெல்வேலி: கோடை வெயிலினால் பலரும் வீடுகளுக்குள் முடங்கியிருந்தாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சரும வறட்சி, முகத்தில் கட்டி, தலைமுடி உதிர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை பலரும் சந்திக்கின்றனர். கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க நமது ஒன் இந்தியா வாசகர்களுக்காக பிரத்யேக ஆலோசனைகளை வழங்கியுள்ளார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா.
கோடைகாலத்தில் சுகாதாரமில்லாத உணவுகள் குளிர்பானங்கள், தண்ணீர் இவைகளால் பாதிக்கும் நோய்கள் அதிகமாக வரும் குறிப்பாக சீதபேதி ,குடல் புண்கள்(ஹெச் பைலோரை) ஹெபடைட்டிஸ்(மஞ்சள் காமாலை), டைபாய்டு, போன்ற நோய்கள் அதிகமாக வரும் ஆகவே தண்ணீரை கொதிக்கவைத்து சூடு ஆறிய பின்பு குடிக்கலாம். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரக்கின்றது. நம்முடைய உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் கோடைகாலத்தில் வெப்ப நிலை 40 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை செல்வதால் உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வையை தோல் சுரக்கிறது.

தோல் நோய்கள்
தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் எண்ணெய் பசைகள், வியர்வையில் இருந்து வெளிப்படுகின்ற உப்புக்கள் இவை சரியாக வெளியேறாமல் தங்கி விடுகின்றது இதனால் வேர்க்குரு,முகப்பரு, பூஞ்சை தொற்றுகள் அதிகமாக கோடைகாலத்தில் ஏற்படுகின்றது. தினசரி குளிப்பதற்கு முன்பாக அருகம்புல் சாறை தேங்காய் எண்ணெயுடன் காய்த்து அந்த எண்ணையை உடலில் தேய்த்து வர வேண்டும் இதனால் தோல் வறட்சி நீங்கும்.

தோல் நோய் நீங்க
வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், கோரைக்கிழங்கு ,பாசிப்பயறு, கார்போகரிசி, நெல்லி வற்றல், ஆவாரம் பூ இவைகளை பொடித்து வைத்த நலங்கு மாவை தேய்த்துக் குளித்துவர தோல் சார்ந்த நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். முகப்பரு வந்திருந்தால் பரு உள்ள இடங்களில் கருஞ்சீரகத்தை தேங்காய் எண்ணெயில் காய்த்து போடலாம். கடல் சங்கை தண்ணீர் விட்டு உரசி முகப் பரு உள்ள இடங்களில் பூசி வரலாம்.

தலை வலி பாரம் நீங்க மருந்து
சைனசைட்டிஸ்-கோடைகாலங்களில் தலை அதிகமாக வியர்ப்பதால் சைனஸ் வெற்றிடங்களில் நீர் கோர்த்து அதனால் தலைவலி தலைபாரம் மூக்கடைப்பு ஏற்படுகிறது. வெந்நீரில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக ஆவி பிடிக்க வேண்டும் ,அதே போன்று வெந்நீரில் நொச்சி இலை போட்டும் ஆவி பிடிக்கலாம். தலைவலிக்கு சுக்கு அல்லது கிராம்பை தண்ணீரில் ஒரசி தலைவலி உள்ள இடத்தில் பூசலாம்.

வெயில் காலத்தில் தலைமுடிவு உதிர்வை தடுக்க தைலம்
வெயில் காலத்தில் ஏற்படுகின்ற தலைமுடி உதிர்தல் நிற்க தைலம் உள்ளது. நாமே எளிமையாக தயாரிக்கலாம். நெல்லிக்காய் சாறு,கருவேப்பிலை சாறு,கரிசலாங்கண்ணிச் சாறு,10 செம்பருத்திப் பூ,வெந்தயம் 10 கிராம் கருஞ்சீரகம் 10 கிராம், வெண்மிளகு 5 கிராம்,இவைகளை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்றாக காய்த்து தலையில் தேய்த்து வர பொடுகு ,தலை ஊரல்,முடி உதிர்தல் நீங்கி தலை முடி நன்றாக கருமையாக வளரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications