வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி நியூஸ்.. ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!
வெயில் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வருகிற ஜுன் மாதம் 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயில் வாட்ட துவங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத கொடுமை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான நகரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் தாண்டியுள்ளது. பகல் நேரங்களில் வெப்பமும், இரவு நேரங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் சிறுபிள்ளைகள் அதிக அளவில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் வெயிலின் கொடுமை காரணமாக இது தள்ளி போடப்பட்டுள்ளது.
ஜுன் 3ஆம் தேதிக்கு பதிலாக ஜுன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் விடுமுறையை தமிழக அரசு நீட்டித்துள்ளதால் பெற்றோர்கள் நிம்மதியும், மாணவர்கள் குஷியும் அடைந்துள்ளனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications