கோடை மழை 85% அதிகம்..வெப்பத்தை தணிக்க 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்..சென்னையில் வெயில் சுடுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைமழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 85 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. மார்ச் மாதத்தில் அனல் காற்று வீசும் என்று கணிக்கப்பட்ட நிலையில் வருணபகவானின் புண்ணியத்தால் ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் கோடை மழை பெய்துள்ளது. வழக்கமாக பெய்யும் அளவை விட கூடுதலாகவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைமழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 85 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. வழக்கமாக 24.1 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 44.5 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், பழனியில் மழை

திண்டுக்கல், பழனியில் மழை

திண்டுக்கல்லில் நேற்று வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்த நிலையில்,மாலை சாரல் மழை பெய்தது. பின்னர் அது கனமழையாக அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது.வடமதுரை, அய்யலூர், தாமரைப்பாடி, பில்லம நாயக்கம்பட்டி, ஜம்புலிம்பட்டி, கம்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதேபோல பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் பழனி பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

 இடியுடன் பெய்த மழை

இடியுடன் பெய்த மழை

கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மிதமான மழை பெய்தது. அப்ச‌ர்வேட்ட‌ரி, ஏரிச்சாலை, கீழ்பூமி, மூஞ்சிக்க‌ல், ஆன‌ந்த‌கிரி, அண்ணாசாலை, உகார்த்தேந‌க‌ர், செண்ப‌க‌னூர், பெருமாள்ம‌லை உள்ளிட்ட‌ பகுதிகளில் மழை பெய்தது.சேலம் மாநகர பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி மம்சாபுரம், வன்னியம்பட்டி கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், வடஉள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வெயில் சுடும்

சென்னையில் வெயில் சுடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+