கோடை விடுமுறை ஓவர்.. ஸ்பெஷல் பஸ்களை இயக்கும் போக்குவரத்து துறை.. 3 நாட்களுக்கு 1500 பஸ்கள்
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 12 மற்றும் 14-ம் தேதிகள் திறக்கப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக 650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் விடப்பட்டது. கோடை விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அதிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளியூர்வாசிகள் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். பண்டிகை நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வதை காண முடியும். இதனால், பேருந்து , ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனை கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் இயக்குவதுண்டு.
அந்த வகையில், பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனால் வரும் பெற்றோர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக 1,500 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-ம் வருடம் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து வரும் 12/06/2023 அன்று பள்ளிகள் திறக்க இருப்பது மற்றும் இந்த வார இறுதி நாட்களான 09-06-2023 முதல் 11-06-2023 வரையிலான மூன்று நாட்களில் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் என, மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு. முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்து நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு. கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறத்.
மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications