சென்னையில் சூரியன் எட்டி பார்க்கும்.. இரவு மீண்டும் மழை வெளுக்கும்! ரிப்பீட்டு!.. COMK அப்டேட்
சென்னை: இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை மற்றும புறநகர் பகுதிகளில் மழை நின்றுவிடும் என கூறிய சென்னை ரெயின்ஸ் மற்றொரு விஷயத்தையும் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில்தான் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு மரங்கள் முறிந்துவிழும். ஆனால் ஜூன் மாதம் அதுவும் கோடை காலத்தில் சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழையால் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மரங்கள் முறிந்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே போக்குவரத்து பாதிப்பால் பலர் காலையில் புறப்பட்டு இன்னும் அலுவலகத்திற்கு போய் சேரவில்லை.
போரூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரமாக வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மீண்டும் மழையா என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ரெயின்ஸ் எனும் தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடைசி பேட்ச் மழை பெய்யும். இது இன்னும் ஓரிரு மணி நேரத்தில் மெல்ல மெல்ல நின்றுவிடும். அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சூரியன் எட்டி பார்க்கும். மீண்டும் இரவு நேரத்தில் மழை பெய்யும். எனினும் இரவு பெய்யும் மழை எப்படி இருக்க போகிறது என்பதை பார்த்தால்தான் தெரியும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது போல் மற்றொரு பதிவில் சென்னை கடலோரத்தில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளன. ஆபிஸ் போகும் நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடை, மழை உறை ஆகியவற்றை கொண்டு செல்லுங்கள். மழையின் தீவிரம் அதிகமாகவே இருக்கும். இடி விழும் அபாயமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் வாய்ப்பிருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை ரெயின்ஸ் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications