இன்று முழு லாக்டவுன் ரத்து.. இரவு 9 மணி வரை கடைகள் இயங்கும் - மறந்துடாதீங்க!
சென்னை: தமிழகத்தில் நாளை (மே.10) முதல் இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே.9) ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழகத்திலும், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. தலைநகர் சென்னையிலும் மிக மோசமாக வைரஸ் பரவி வருகிறது.
இந்த சூழலில், கொரோனா முதல் அலையின் போது, லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது போன்று, இப்போதும் முழு லாக் டவுன் போட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

மே 10 முதல்
இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வரும் மே.10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிறு கடைகள் உண்டு
இதன்படி, தமிழகத்தில் மே 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கால அவகாசம்
இன்று (மே.9) காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணி வரை
நாளை (மே.10) முதல் முழு லாக்டவுன் தொடங்கவுள்ள சூழலில், 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications