"ஈரக்குலையே" நடுங்கி போச்சு.. கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுது.. நொறுங்கி போன ஓனர்.. நெகிழ்ச்சி
ஆடு ஒன்று சந்தையில் கதறி கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: ஆடு ஒன்று கதறி கதறி அழும் வீடியோ, காண்போர் இதயத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது... என்ன காரணம்?
Recommended Video
பக்ரீத் பண்டிகை என்றாலே பிரியாணிதான் ஸ்பெஷல்... பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக பார்க்கப்படும்..
அதனால்தான், கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை ஜரூராக நடக்கும்.. அந்த வகையில், இந்த முறை பக்ரீத் பண்டிகைக்கும் ஆடுகள் ஏராளமாக விற்பனை ஆனது..

குர்பானி
குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கவுசர்பாக் என்ற சந்தையில் ஒரு ஆடு ரூ.8 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.. காரணம், இந்த சந்தையானது நாட்டிலேயே முன்னணி கால்நடை விற்பனை சந்தைகளில் ஒன்றாகும்.. இங்கு மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகள், மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்...

ஸ்பெஷல் காதுகள்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோட்டா என்ற இடத்தில் இருந்து வந்த ஆடு ஒன்று ரூ.8 லட்சத்திற்கு விற்பனை ஆகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஆட்டின் எடை சுமார் 170 கிலோவாம்.. இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா? காதுகள் 16 முதல் 17 இன்ச்கள் நீளமாக இருந்ததுதானாம்.. அதுமட்டுமல்ல, இந்த ஆட்டை பராமரித்துப் பார்த்துக்கொள்வதற்காகவே, 2 பேரை வேலைக்கு வைத்திருந்தாராம் , ஓனர் ஆசிப்..

கட்டிப்பிடித்து அழுதது
சந்தையில் இந்த ஆட்டை பற்றி பூரிப்புடன் சொல்லி கொண்டே இருந்தார்.. அதேபோல, இந்த 2 நாட்களாக ஒரு ஆடு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. இது எந்த ஊரில் நடந்தது என்று தெரியவில்லை.. குர்பானிக்காக இந்த ஆட்டை விற்பதற்காக, அதன் ஓனர் சந்தைக்கு அழைத்து வந்தார்.. ஒருநபர் அந்த ஆட்டை விலை பேசினார்.. பிறகு ஓனரிடம் பணத்தை தந்துவிட்டு, ஆட்டை கிளப்பி கொண்டு போக முயன்றார்.. அப்போது திடீரென அந்த ஆடு, ஓனரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டது.. அந்த ஆட்டை சமாதானப்படுத்த முயன்றும் ஓனரால் முடியவில்லை..

விக்கி விக்கி அழுதது
அழுகையை ஆடு நிறுத்தவே இல்லை.. விக்கி விக்கி அழுததை பார்த்து, சந்தைக்கு வந்தவர்கள் கண்கலங்கி நின்றனர்.. ஓனரும் கண் கலங்கினார்... இதனை பார்த்ததும் அந்த ஆட்டினை வாங்கிய நபர், பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த ஆட்டை ஓனரிடமே கொடுத்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.. அதற்கு பிறகு ஆடு அழவில்லை.. நெஞ்சை பிசையும் இந்த பாசப்போராட்டத்தின் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.... அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications