பள்ளி மாணவர்களுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்.. தெம்பூட்டிய அந்த வார்த்தை
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தைரியம் தந்துள்ளார் அன்பில் மகேஷ்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதமாற்றம் குறித்து எழுந்துள்ள புகாரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. அத்துடன், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்...
இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை, தையல் வகுப்புக்கு வரும் மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதோடு கிறிஸ்தவ மத போதனைகளை சொல்லி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வீடியோ
இதனையடுத்து மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்... அதிர்ந்துபோன பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.. பிறகு, போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர்.

பைபிள்
அதில், "ஆசிரியர் எங்களை பைபிளை படிக்குமாறு வற்புறுத்தவது மட்டுமின்றி முட்டிபோட்டு பிரேயர் பண்ண சொல்லிக் கட்டாயப்படுத்துவார்.. எங்களை பைபிள் வாசிக்க சொல்லுவார்... நாங்கள் இந்துனு சொல்லுவோம். பகவத் கீதை மட்டும் தான் படிப்போம், பைபிள் படிக்க மாட்டோமுனு சொன்னோம்.. அதற்கு அவர், பைபிள்தான் நல்ல புத்தகம், பகவத்கீதை கெட்டது சொல்லி தருகிறது" என்று மாணவி வீடியோவில் கூறியிருந்தார்... இறுதியில் இது சம்பந்தமான புகாரில், மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சஸ்பெண்டு
இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்... அதில், முதற்கட்டமாக சம்பத்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தி உண்மை தன்மையை ஆராய்ந்து அவர் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பிறகு துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிக்கல்கள்
தொடர்ந்து அன்பில்மகேஷ் பேசும்போது, "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்க கூடாது என்பதற்காக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 35 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டம் குறைத்தால் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்படும். எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பயமின்றி தயாராக வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications