ரேஷன்தாரர்களுக்கு குஷி..எப்பவும் போலவே சர்க்கரை அட்டைக்கு "இந்த பொருள்" தரப்படும்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்து வரும்நிலையில், பொதுமக்கள் கதிகலங்கி போயுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், ரேஷன்தாரர்களுக்கு, நம்பிக்கை மிகுந்த வார்த்தையை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.. 2 நாளுக்கு முன்புகூட, சின்ன வெங்காயம் விலையும், பூண்டு விலையும் கிலியை தந்தன. அதிலும் பூண்டு ஒரு கிலோ 450 ரூபாயை தாண்டி சென்றுள்ளது.
மற்றொருபக்கம் அரிசி, பருப்புகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசியை பொறுத்தவரை, கடந்த 4 மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.. சென்னையில் மட்டும் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது.

பருவமழை: ஏற்கனவே பருவமழை சொதப்பியதால், விளைச்சலில் வித்தியாசம் தென்பட்டது.. பிறகு, கடந்த டிசம்பர் மாதம், தாக்கிய மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டது.. அதற்குபிறகு, அறுவடை சமயத்தில் பலமான காற்று வீசியதால் மீண்டும் விளைச்சல் பாதிக்கப்பட்டது..
மொத்தத்தில், கடந்த 4 மாத காலத்தில் விளைச்சல் வெகுவாக குறைந்துவிடவும், நெல் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. வழக்கமாக தை மாதம், அறுவடை சமயத்தில் அதாவது ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் அரிசி விலை குறையும்..
அரிசி விலை: ஆனால், நெல் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதுடன், விலையும் கூடியுள்ளது பெருத்த கவலையை நடுத்தர, ஏழை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இன்னும் 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்றும் வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்..
இப்படிப்பட்ட சூழலில், தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், தமிழக ரேஷன் கடைகளில் இப்போது வரையிலும் அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது என்றும் பெரிய கருப்பன் உறுதி தந்துள்ளார்.
கூட்டுறவு கடன்: தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசியபோது, "தலைநகரம் தொடங்கி கிராமம் வரை கூட்டுறவு சங்கத்தின் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா விவசாய கடன் வழங்கப்படுகிறது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் 13,500 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு 16 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார் அமைச்சர்












Click it and Unblock the Notifications