சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சி.. துள்ளுது சேலம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: புதிய ரேஷன் கார்டுகளுக்கு, விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலமாகவே காத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.
தமிழகத்தில், 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.. இது ரேஷன்தாரர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்திவிட்டது.

புதுகார்டு: எனவே, புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள். ரேஷன் கார்டு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் புதுகார்டு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தும், புது கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தன.
இதன் காரணமாக, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வந்தது.. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நின்ற.. இதனால் ரேஷன்தாரர்களால், பொருட்களை வாங்க முடியவில்லை.. இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளுமே நடக்கவில்லை..
அறிவிப்பு: தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டு அச்சிட முடியாது.. அதனால், விண்ணப்பித்து காத்திருப்போர், இன்னும் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் அச்சம் கிளம்பியது. ஆனால், கடந்த வாரம், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதன்படி, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது.. இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாகவும், அவர்கள் அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டு எண்ணை கடை ஊழியர்களிடம் தெரிவித்து, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பிறகு கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
விண்ணப்பம்: இந்நிலையில், சேலம் மாவட்டத்துக்கு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.. அதாவது சேலம் மாவட்டத்தில் 2023 மார்ச் முதல் ஜூலை வரை விண்ணப்பித்தவர்களில் 3460 தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்களாம்.. தேர்வானவர்களுக்கான கார்டுகள், 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டு விட்டுள்ளது..
இதில், சேலம் தாலுகாவுக்கு, 484, ஓமலூர், 380, சேலம் மேற்கு, 321, மேட்டூர், 298, சேலம் தெற்கு, 283, வாழப்பாடி, 281, தலைவாசல், 276, இடைப்பாடி, 227, சங்ககிரி, 196, காடையாம்பட்டி, 188, ஆத்தூர், 187, பெத்தநாயக்கன்பாளையம், 164, கெங்கவல்லி, 145, ஏற்காடு, 30 என தாலுகாவிற்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்வானவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகாவிற்கு நேரில் சென்று கட்டணம் ஏதும் இன்றி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புது ரேஷன் கார்டு: கடந்த 2023 ஆகஸ்ட் முதல், இப்போது வரை புது கார்டுக்கு 8,500க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.. எம்பி தேர்தல் முடிவுக்கு பிறகு, அரசு ஒப்புதல் பெற்று தகுதியானவர்களுக்கு, புது ரேஷன் கார்டு வினியோகம் இருக்கும் என்று வட்ட வழங்கல் அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், விண்ணப்பித்த பலருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் கிடைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications