வெள்ளிக்கிழமை குஷி.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பார்த்தீங்களா? இதுதான் தமிழக அரசு.. சென்னை நிம்மதி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை முதல் கூடுதலாக 120 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் தலைதூக்கியதையடுத்து, இதற்கு முற்றுப்புள்ளியை வைக்கும் விதமாக போக்குவரத்து துறை தொடர்ந்து விளக்கம் தந்து வருகிறது. எனினும், கடந்த வெள்ளிக்கிழமையன்று, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவசங்கர்: இந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கூடுதலான பல விளக்கங்களை தந்திருந்தார்.. குறிப்பாக அமைச்சர் பேசும்போது கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டம் குறித்து விளக்கம் தந்தார். அத்துடன், இன்றுமுதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.. தினசரி 740 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக, இந்த 120 பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் : கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து நாளொன்றுக்கு 1,221 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது... இதில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள், மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை முதல், கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,215 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறையை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை இயக்கப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகளும், சனிக்கிழமை 85,265 இருக்கைகளும், ஞாயிற்றுக்கிழமை 86,411 இருக்கைகள் காலியாக இருக்கின்றன.. அதனால், பயணிகள் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கவும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இருக்கைகள்: அதுமட்டுமல்ல, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னைவாசிகள், வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாவதால், இந்த ஏற்பாட்டினை போக்குவரத்து துறை செய்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications