"சர்ப்ரைஸ்" தந்தார் ஸ்டாலின்.. பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி.. சிக்கல் தீர்கிறது
தமிழக அரசு, மகளிர் இலவச பேருந்துகளுக்கு பிங்க் கலர் பூசி வருகிறது
சென்னை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.. அதன்படி பேருந்துகளின் நிறத்தை மாற்றி அமைத்து வருகிறது.
Recommended Video
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக உள்ளது.
இத்தனைக்கும் அந்த சமயம் அதிமுக அரசானது, கஜானாவை காலி செய்து வைத்து போனதாக திமுக சொல்லி இருந்தது.. மிகப்பெரிய நிதி நெருக்கடியில்தான் முதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்.

இலவச பஸ் பயணம்
இந்த இலவச பஸ் பயண அறிவிப்பினை எதிர்க்கட்சிகள்கூட அன்று கேள்வி கேட்டன.. வாக்குறுதியில் எத்தனையோ அறிவிப்புகளை சொல்லிவிட்டு, இந்த இலவச பஸ் பயணத்தை எதற்காக இத்தனை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்றும் விமர்சித்தன.. ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றனர்.

ஸ்டாலின் அதிரடி
மற்றொருபுறம் மற்ற துறைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்வது போல, போக்குவரத்து துறையிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம்.. அப்படி ஆய்வு மேற்கொள்ளும்போதெல்லாம், பஸ்ஸில் இருக்கும் பயணிகளிடம் "பஸ்கள் சரியான நேரத்தில் வருகிறதா? போதுமான வசதி உள்ளதா? கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா? பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா? என்று அக்கறையுடன் கேட்டு செல்வார்..

அமோக ஆதரவு
இப்படி முதல்வர் ஸ்டாலின் திடீர் திடீரென பஸ்ஸில் ஏறி ஆய்வு செய்வது, அதிகாரிகள் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திவிடுவது வழக்கம். ஆக மொத்தம் பெண்களுக்கான இலவச பேருந்து, அமோக வரவேற்பை திமுக அரசுக்கு பெற்று தந்தது.. இதனால் பயன் பெறும், பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது... அதன் காரணமாக, மாநிலம் முழுதும் உள்ள 7,300 அரசு நகர பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டும் வருகின்றன.
ஆனால் ஒரே ஒரு சிரமம் இதில் காணப்பட்டது.. தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெண்களுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.. சிலசமயங்களில் சில அரசு பஸ் கண்டக்டர்கள், பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டுவிடும்.. இந்த பிரச்சனைக்குதான் தமிழக அரசு, சூப்பர் தீர்வு ஒன்றை அறிவித்துள்ளது..

வெள்ளோட்டம்
அதன்படி, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பிங்க் கலர் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது... இதன் முன்னோட்டமாக, சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழகத்தில், 3 பேருந்துகளுக்கு பிங்க் நிறம் பூசும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் சொல்லும்போது:

கலர் மாறி போச்சு
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகளுக்கு, தனி நிறம் பூச முடிவு செய்தோம். அதன்படி, பிங்க் கலரை, பஸ்ஸின் முன் மற்றும் பின் பகுதியில் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன... இப்போதைக்கு மாதிரிக்காக, 3 பேருந்துகளில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன... அரசின் ஒப்புதல் கிடைத்த பின், படிப்படியாக மற்ற அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளிலும் ‘பிங்க்' நிறம் பூசப்படும் என்றனர்.. ஆக, பெண்களுக்காக, திமுக அரசின் கூடுதல் சலுகை அறிவிப்புதான் இதுவாகும்..!!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications