பத்திரப்பதிவு ரூல்ஸ் மாறுகிறது.. இனி இதெல்லாம் கட்டாயம்.. ஸ்டார் 2.0 ஸ்பீடு.. தமிழக பதிவுத்துறை செம
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்தவகையில், தற்போதும் முக்கிய ஏற்பாட்டினை செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையையும், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை அனுப்பி வைத்திருக்கிறது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகிதப் பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பட்டா பிரதிகள் : நம்முடைய தமிழகத்தில், தமிழ்நிலம் மென்பொருள் வாயிலாக பட்டா பிரதிகள், ஆன்லைன் முறைக்கும் மாற்றப்பட்டிருக்கின்றன. எனினும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு, சார் - பதிவாளர்கள் வலியுறுத்துவதால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்குவதற்காகவும் அலைய வேண்டியுள்ளது.
அதுமட்டுமல்ல, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைனிலேயே எளிய முறையில் கிடைக்கும்போது, அதை பிரதி எடுத்து வரச் சொல்வது தேவையில்லாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதனால்தான், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, பதிவுத்துறைக்கு நில அளவைத் துறை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து பதிவுத்துறை தரப்பில் முக்கிய உத்தரவு ஒன்று நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது..
புதிய அறிவுறுத்தல்கள்: அதில், "பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும்போது, பட்டா, சிட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றின் காகிதப் பிரதிகளை கேட்க கூடாது. இந்த சொத்துகளின் சர்வே எண்ணை பயன்படுத்தி, வருவாய்த் துறையின் தமிழ்நிலம் தகவல் தொகுப்பில் பட்டா விவரங்களை, சார்-பதிவாளர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் காகிதப் பிரதி கேட்டு, பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது" என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமிக்க வேண்டி இருப்பதால் ஆதார் ஆணையத்தின் நடைமுறையை பின்பற்றி சார்பதிவாளர் அலுவலகங்களில் புதிய கருவி பயன்படுத்தப்படுகிறது.. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து பத்திர பதிவுத்துறை சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
பாதுகாப்பு காரணம்: அந்த சுற்றறிக்கையில், "ஆதார் ஆணைய அறிவுரைகளின் படி கூடுதல் பாதுகாப்பு காரணங்களுக்காக L1 Finger Print Device-களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் ஆணையம் LO Finger Print Device-ன் பயன்பாட்டை 30.09.2024 நிறுத்திக்கொள்வதாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், 01.10.2024 முதல் L1 Finger Print Device மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் காண புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து அலுவலகங்களிலும் தற்போது "ஒப்புதலுடன் கூடிய ஆதார் அங்கீகாரம்" என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சார் பதிவாளர் அலுவலகம்: தற்போது ஆதார் வழி ஆவணதாரர்களை அடையாளம் காண "Mantra MFS 100" (LO Finger print Device) στο பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட L1 Finger print Device-களை மட்டுமே 01.10.2024 முதல் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி, நமது துறையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் "Mantra MFS 110" என்ற L1 Finger print Device திருவாளர்கள் எல்காட் நிறுவனம் வழி முன்பே வழங்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை சட்டத்திற்கு ஏற்ப ஆவணதாரர்களின் விரல் ரேகையை சேமித்து வைக்க வேண்டியிருப்பதாலும், L1 Finger Print Device களைப் பொருத்து விரல் ரேகையை சேமிக்க இயலாது என்பதாலும் Lo - Finger Print Device ஆவணதாரர்களின் கைரேகையை சேமிப்பதற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஆவணதாரர்கள்: எனவே, இனிவரும் காலங்களில் இரண்டு விரல் ரேகை கருவிகளையும் (LO மற்றும் L1) பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் ஆவணதாரர்களை அடையாளம் காண ஸ்டார் 2.0 மென்பொருளில் புதிய விரல் ரேகை கருவியினை பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்டவாறு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
ஆவணதாரர் விரல் ரேகையை முதலில் L1 Finger print Device(Mantra MFS 110)-ல் பதிக்க வேண்டும். (இரண்டு கருவிகள் இருப்பதால் இதனை எளிதாக அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த கருவியில் "முதலாவது/First" என்று எழுதி ஒட்டிக்கொள்ளலாம்) ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு ஸ்டார் 2.0 மென்பொருள் "சரி/தவறு" என்ற தகவலைத் தரும்.
கருவிழிப்படல வருடி கருவி: தற்போதைய நடைமுறைப்படி விரல் ரேகை பொருந்தாத நிலையில் "கருவிழிப்படல வருடி(Iris Scanner)" வழியாக அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். கருவிழிப் படல வருடி கருவியைப் பொறுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள கருவியையே பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications