வானில் நடந்த அதிசய நிகழ்வு! "சூப்பர் ப்ளூ மூன்" சென்னை உள்பட உலகம் முழுவதும் பார்த்து ரசித்த மக்கள்!
சென்னை: சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு நேற்று நிகழ்ந்தது. உலகம் முழுவதும் வெறும் கண்களால் ஏராளமான மக்கள் இந்த நிகழ்வை பார்த்து ரசித்தனர். சென்னையில் கூட சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு தெரிந்தது. சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் இந்த நிகழ்வை பார்த்து ரசித்தனர்.
வானில் நிகழும் அதிசய நிகழ்வுகளில், சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வும் ஒன்றாகும். உலகம் முழுவதும் நேற்று இரவு சூப்பர் ப்ளூ மூனை மக்கள் பார்த்து ரசித்தனர். பூமிக்கு மிக அருகில் நிலவு இருந்தால் அது சூப்பர் நிலவு என்று கூறப்படும். இதுவே பவுர்ணமி என்று சூப்பர் நிலவு தென்பட்டால், சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படும். இந்த நிகழ்வு 3 நாட்கள் வானில் தென்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

சூப்பர் ப்ளூ மூன்: நேற்று இரவு பவுர்ணமி என்பதால் சூப்பர் ப்ளூ மூன் தென்பட்டது. இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசித்தனர். தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சூப்பர் ப்ளூ மூன் நிலவு தென்பட்டது. இதனை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். சென்னையிலும் பல்வேறு இடங்களில் மக்கள் சூப்பர் ப்ளூ மூனை பார்த்து ரசித்தனர். இந்த நிலவை சாதாரணமாக வெறும் கண்களாலே இந்த நிகழ்வை பார்க்கலாம். தொலைநோக்கி எதுவும் தேவையில்லை என்பதாலும், சிறுவர், சிறுமிகள் உள்பட பலரும் நிலவை பார்த்து ரசித்தனர்.
சென்னையில் தெரிந்தது: சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் என்று தனித்தனியாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். ஆனால் நேற்று ஒரே நேரத்தில் இந்த இரு நிகழ்வுகளும் வானில் நிகழ்ந்தது. இதனால் தான் இந்த நிகழ்விற்கு சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு என்று கூறப்படுகிறது. இது அதிஷய நிகழ்வுகளில் ஒன்றாகும். சூப்பர் மூன் என்பது பூமிக்கும் நிலவுக்கும் இருக்கக்கூடிய தொலைவானது மிக குறைந்து இருப்பது ஆகும்.
சூப்பர் மூன் / ப்ளூ மூன்: அதாவது வழக்கமாக தெரியும் நிலவை விட சூப்பர் மூன் என்பது 14 சதவீதம் பெரியதாக தெரியும் நிகழ்வாகும். பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலவு நெருங்கி வருவது ஆகும். இதனால் வழக்கமாக நிலவு தெரிவதை விட மிகப்பெரியதாக அதாவது 14 சதவீதம் பெரியதாக தெரியும். ஆனால் ப்ளூ மூன் என்பது நிலவு மிகவும் பிரகாசமாக தெரிந்தால் ப்ளூ மூன் என்று அழைக்கப்படும். இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் தெரிந்தால் சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படும்.
எப்படி பெயர் வந்தது?: "ப்ளூ மூன்" என்ற சொல்லுக்கும் சந்திரனின் நிறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது ப்ளூ மூன் என்றால், நிலவு நீல நிறமாக தெரியும் என்று அர்த்தமல்ல. ப்ளூ மூன் என்று பெயர் வருவதற்கு 1883ம் ஆண்டில் இந்தோனேசியாவின் நடந்த ஒரு சம்பவம் தான் காரணம். அதாவது இந்தோனேசியாவின் க்ரகடோவா எரிமலை வெடித்து 80 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியது. அதில் ஒரு மைக்ரான் அளவு கொண்ட சிறிய சாம்பல் துகள்கள் வானை முற்றிலுமாக மறைத்தன. அந்த நாளில் வானில் முழு நிலவு தோன்றியது. இதில் இருந்து வெளியேறிய சாம்பலின் காரணமாக அப்போது நிலவானது நீல நிறமாக காட்சியளித்தது. இதன் காரணமாக இந்த பெயர் வந்தது.
இதேபோன்று, 1980 ஆண்டில் செயின்ட் ஹெலன்ஸ் மவுண்ட் எரிமலை வெடிப்பு, 1983 இல் மெக்சிகோவில் எல் சிச்சோன் எரிமலை வெடிப்பு, 1991ல் பினாடுபோ எரிமலையின் வெடிப்பின்போதும் முழு நிலவு தோன்றியிருந்தது. அந்த நாட்களிலும் நிலவு நீல நிறத்தில் தெரிந்ததால், ப்ளூ மூன் என்கிற பெயர் உருவாகியிருக்கிறது. அதுவே இப்போது வரையும் அழைக்கப்படுகிறது.
எத்தனை முறை வரும்: ப்ளூ மூன் என்பது ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வரும்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வாகும். சூப்பர் ப்ளூ மூன் 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். ஒரே மாதத்தில் இரண்டு முறை பௌர்ணமி ஏற்படும். பூமிக்கும் நிலவுக்கும் 3,84,400 கி.மீ தொலைவு இருக்கிறது. பூமிக்கு நெருக்கமாக வரும் நிகழ்வை பெரிஜி என்று கூறுகிறார்கள். இந்த சமயத்தில் நிலவு 3,56,400 கி.மீ என நெருக்கமாக வரும். தொலைவாக இருக்கும் நிகழ்வை அபோஜி என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நிலவு 4,05,500 கி.மீ தொலைவில் இருக்கும். இதே சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வின்போது நிலவு வழக்கத்தைவிட 30% பிரகாசமாகவும், 14% நெருக்கமாகவும் தெரியும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications