தினமும் ரூ.250 கட்டினாலே.. நீங்க லட்சாதிபதிதான்.. பயனுள்ள போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. சூப்பர் வட்டி பாருங்க
சென்னை: வருடந்தோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செலுத்தி, பெரிய தொகையை பெறக்கூடிய சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா? வரிச்சலுகைகளையும், கடன் வசதியையும் அபரிமிதமாக தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம் எது என்று தெரியுமா?
இந்திய தபால் துறையானது, பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவே, ஏராளமான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அதிலும், வருமான வரி விலக்கு அளிக்கக்கூடிய சேமிப்பு திட்டங்களையும், அஞ்சலகங்கள் வழங்கி வருகின்றன... அந்தவகையில், அஞ்சல் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் உள்ளன.

போஸ்ட் ஆபீஸ் திட்டம்: நீங்கள் செய்யும் முதலீடு அனைத்துமே பாதுகாப்பாக இருப்பதால், இந்த தபால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பொதுமக்களின் நம்பகத்தன்மையை பெற்று வருகிறது. அந்தவகையில், குறிப்பிட்டு சொல்லக்கூடியதுதான் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லக்கூடிய PPF திட்டமாகும். நீண்ட கால முதலீடுகளை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்.
இந்த PPF திட்டத்தில் வருடத்துக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.. இதற்காக பெரிய அளவிலான முதலீடுகள் தேவையில்லை.. சிறிய முதலீடு செய்தாலும், அதிக லாபத்தை உங்களால் பெற முடியும்.. உங்களது மொத்த முதலீடு, சம்பாதித்த வட்டி, முதிர்வுத்தொகைக்கு வரிகள் எதுவுமே கிடையாது என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். வருமான
ஹைலைட்: வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் சந்தாதாரர்கள் விலக்குகளை பெற முடியும் என்பது, இத்திட்டத்தின் மற்றொரு ஹைலைட்டாகும். இதில் கடன் வசதியும் உண்டு என்பது இன்னொரு ஸ்பெஷலாகும்.
அந்தவகையில், வருடத்துக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம்... குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்ய முடியும். தினமும் 250 ரூபாய் அதாவது மாதம் ரூ.7500 முதலீடு செய்தாலே போதும். அப்படியானால், வருடத்துக்கு டெபாசிட் ரூ.90,000 ஆக இருக்கும்... 15 வருடங்களில் 13,50,000 ரூபாய் முதலீடு செய்தால், 7.1 சதவீத வட்டி விகிதத்துக்கு வட்டியாக 10,90,926 ரூபாயும், 15 வருடங்களில் 24,40,926 ரூபாயையும் நீங்கள் பெறுவீர்கள்.
கடன் வசதி: இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன், பாதுகாப்பற்ற கடனை விட மலிவானது... இந்தக் கடன் பாதுகாப்பற்ற கடனை விட மலிவானது... பிபிஎஃப் கடனுக்கான வட்டி விகிதமானது, பிபிஎஃப் கணக்கின் வட்டி விகிதத்தை விட 1 சதவீதம் மட்டுமே அதிகம்.. அதாவது, நீங்கள் பிபிஎஃப் கணக்கில் 7.1 சதவீத வட்டியை எடுத்துக்கொண்டால், கடனை பெறுவதற்கு 8.1 சதவீத வட்டியைச் செலுத்த வேண்டும்.
இந்த பிபிஎப் திட்டமானது, அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்பு திட்டம் என்பதால் முதலீட்டாளர்களுக்கு பெருத்த நமபிக்கையை வழங்குகிறது. முதலீடு செய்யப்படும் தொகைக்கு 15 வருடங்கள் கால அளவு என்பதால், அதற்கு முன்பே பணத்தை எடுக்க முடியாது.. 15 வருடம் கழித்துதான் பணத்தையும் முழுமையாக எடுக்க முடியும்.. ஆனால், நம்முடைய சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை கடனாக பெற முடியும். இதற்கு 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும், இந்த PPF கணக்கை துவங்கலாம்.. தபால் நிலையங்களில் பிபிஎப் கணக்கு தொடங்கலாம்... அதேபோல ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்களிலும் கணக்கு தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications