இரவோடு இரவா மாறுது எல்லாமே.. 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை.. மின்வாரியம் சொல்றதை பாருங்க.. சூப்பர்
சென்னை: கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க, மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும்.. உச்சபச்சமாக, கடந்த வருடம் ஏப்ரல் 20-ம் தேதி, தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது.. அந்தவகையில், இந்த வருடம் ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டது.

கோடை காலம்: தற்போது கோடை வெயில் துவங்கிவிட்டதால், வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை எட்டக்கூடும்.
காரணம் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்.. அத்துடன், தேர்தலும் நெருங்கிவிட்டதால் மின்தேவைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.. இதை கணக்கிடும்போது, இனிமேல் நம்முடைய தினசரி மின்தேவையாவது 20, 744 மெகாவாட் அளவை தாண்டும் என்கிறார்கள்.
எனினும். மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரமும், மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் நமக்கு போதுமானதாக இல்லை. எனவே, 3,571 மெகா வாட் மின்சாரத்தை ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களிடம் இருந்து பெறும் யோசனையில் தமிழக மின்சார வாரியம் உள்ளதாக தெரிகிறது. இந்த தற்காலிக ஏற்பாடு, கோடை காலத்தில் தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
மின்தேவை: மற்றொருபக்கம், கோடை காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின்வாரியம் சிறப்பு பராமரிப்பு பணிகளை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அதிக வெப்பம் காரணமாக, மின்விநியோகம் செய்யப்படும் கேபிள்கள், மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்) உள்ளிட்டவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின்வெட்டு, குறைந்தழுத்த மின்விநியோகம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், சிறப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல, துணைமின் நிலையங்கள் அருகிலுள்ள மின்மாற்றிகள் பராமரிக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்தப்பட உள்ளது.. தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படுவதுடன், குறைந்தழுத்த மின்விநியோகம் செய்யப்படும் இடங்களில் அப்பிரச்சினையைத் தீர்க்க கேபிள்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை மாற்றப்படும் என்று தெரிகிறது.
மின்சாதனங்கள்: அதுமட்டுமல்ல, மின் சாதனங்களில் ஏற்படும் பழுது காரணமாக சில இடங்களில், மின் தடைகள் அவ்வப்போது ஏற்பட்டுவிடுவதால், இதனை விரைந்து சரிசெய்ய மின் வினியோக பணியில் அதிக கவனம் செலுத்துமாறு பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியிருக்கிறதாம்..
இதுகுறித்து, மின் வாரிய தலைமை பொறியாளர் ஒருவர் சொல்லும்போது, தடையில்லாமல் மின்சாரம் வழங்க, மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. மாலை, 6 மணி முதல் நள்ளிரவு, 12 மணி வரை மின் தேவை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. எனவே, இதுபோன்ற நேரங்களில், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதை விரைந்து சரிசெய்ய இரவு வரை அலுவலகங்களில் இருந்தபடி, மின் வினியோக பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு உதவி பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
சபாஷ் : மொத்தத்தில், மின்தேவையை தீர்க்கவும், கோடையில் கரண்ட் பிரச்சனையால் யாரும் அவதிப்படாமல் இருக்கவும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
TNEB தலைமையகத்தில் பரபரப்பு: ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications