சூப்பர் மார்க்கெட்டுக்கு பால் வாங்க வந்த பிரியங்கா.. கேஷூவலா கேமராவை பார்த்தால்? திணறிய கன்னியாகுமரி
சென்னை: இளம்பெண் ஒருவர் முதியவருடன் சூப்பர் மார்க்கெட் கடைக்கு வந்துள்ளார்.. 2 பால் பாக்கெட்டுகளை வாங்கி கொண்டு, அதற்குரிய பில் போட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர்.. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பாக 2 பேர் கைதாகி, அவர்களிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில்?
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ளது முதப்பன்கோடு.. இந்த பகுதியில் பெத்தேல் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது..

நேற்று சாயங்காலம், இந்த கடைக்கு 2 பேர் வந்திருந்தனர்.. அவர்கள் சுற்றுமுற்றும் சென்று, ஏராளமான பொருட்களை தேடி தேடி எடுத்தனர். ஆனால், கடைசியில் பில் போடாமல் கமுக்கமாக வெளியேறினார்கள்.
பிரியங்கா யார்?
இவர்கள் 2 பேரும் உள்ளே வந்ததிலிருந்து, பொருட்களை எடுப்பது வரை அனைத்தையும் சூப்பர் மார்க்கெட்டின் ஓனர் பிரவின் என்பவர் கவனித்து கொண்டேயிருந்தார்.. இருவரும் பொருட்களுடன் வெளியேறியபோது, அங்கிருந்த பணியாளர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை எடுத்திருந்தது தெரியவந்தது.
அந்த பொருட்கள் அனைத்தையும், தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளில் நிரப்பியதுடன், மிச்சமிருந்த பொருட்களை பாக்கெட்களிலும், உடலின் பல பாகங்களிலும் மறைத்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. பிறகு இது குறித்து அருமனை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசாரும் விரைந்து வந்து விசாரித்தனர்.
பார்சல் சர்வீஸ் கம்பெனி
பிடிபட்ட இருவருமே மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள்.. குணசேகரன் உத்தமதாஸ் (66), மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த பிரியங்கா (35) என்பது தெரியவந்தது. 2 பேரும் மார்த்தாண்டம் ரதிமீனா பார்சல் சர்வீஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்களாம்..
கடந்த 7 மாதமாகவே, இந்த பெத்தேல் ஸ்டோரில் இருந்து ஏராளமான பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அதிலும் காஸ்ட்லி பொருட்களை எடுப்பதற்காகவே இங்கு வருவார்களாம்.. கடைக்குள் நுழைந்ததுமே, விலை உயர்ந்த பொருளை முதலில் எடுத்து, பைக்குள் போட்டுக் கொண்டு, பிறகு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, மலிவான பொருட்களை தேடுவது போல நடிப்பார்களாம்.
பிறகு திருடி கொண்டுவந்த பொருட்களை 8ம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகனை வரவைத்து கைமாற்றி விட்டுவிட்டு, கடைசியில் வெறும் 2 பால் பாக்கெட்டுக்கு மட்டும் பில் போட்டு கொண்டு கிளம்பிவிடுவார்களாம்..
புது வீட்டில் பொருட்கள்
பிரியங்காவிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்ததுடன், திருடிய பொருட்கள் எல்லாவற்றையும், தான் கட்டி வரும் புது வீட்டில் வைத்திருப்பதாக சொன்னார்.. உடனே போலீசார் அவரது புது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரேயொரு செல்போன் சார்ஜர் மட்டும் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் 2 பேரையுமே கைது செய்துள்ளனர்..
பெத்தேல் ஸ்டோர் போல, வேறு ஏதாவது கடைகளில் திருடியிருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
பார்சல் சர்வீசில் வேலை பார்க்கும் பிரியங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறையாகும்.. அதனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் சூப்பர் மார்கெட்டில் திருட மாட்டாராம்.. மிச்சமுள்ள 6 நாட்களுமே இந்த கடைக்கு வந்துவிடுவாராம்.. 2 பால் பாக்கெட்டை தினமும் வாங்கி செல்வதால், ரெகுலர் கஸ்டமர் போல என கடையில் உள்ளவர்கள் நினைத்துள்ளார்கள்.. ஆனால் தினமும் கிட்டத்தட்ட ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அபேஸ் செய்து வந்துள்ளார் பிரியங்கா..
பிரியங்கா சிக்கியது இப்படித்தான்
பெத்தேல் ஸ்டோர் ஓனர் பிரவின், கஸ்டமர்கள் பில் போடும் கவுண்டர் அருகில் தன்னுடைய செல்போனை சார்ஜரில் போட்டுள்ளார்... சிறிது நேரம் கழித்து, செல்போனை எடுத்து சென்றுவிட்டார்.. பிறகு மறுபடியும் சார்ஜர் போட வந்தபோது சார்ஜரை காணவில்லையாம்.. பில் கவுண்டர் பகுதியிலேயே தேடிப்பார்த்தும் சார்ஜர் கிடைக்காததால், ஸ்டோரில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்துள்ளார்..
பால் பாக்கெட்டுக்கு பில்
அப்போதுதான் பிரியங்கா சார்ஜரை எடுத்து செல்வது அதில் பதிவாகியிருந்தது.. பிரியங்கா தினமும் வந்துசெல்லும் கஸ்டமர் என்பதால், அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார்..
அதில் காஸ்ட்லி பொருட்களில் தன்னுடைய கைவரிசையை காட்டியதும், தினமும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்படுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. பிறகுதான், குணசேகரன் உத்தமதாஸ், பிரியங்கா இருவருமே திருடுவதற்காக, கடைக்கு வந்து செல்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளார்..
அதிர்ந்த அருமனை
நேற்று வழக்கம்போல் பிரியங்காவும்,குணசேகரனும் கடைக்கு வந்தது முதல் பொருட்களை அள்ளிக்கொண்டு, பால் பாக்கெட்டுக்கு மட்டும் பில் போடுவது வரை அனைத்தையும் அமைதியாக நின்று கவனித்து கொண்டிருந்தாராம் கடையின் உரிமையாளர் பிரவின்.. இறுதியாக கடையைவிட்டு வெளியேறும்போதுதான், ஊழியர்களை விட்டு சோதனை செய்ய சொல்லி, சிக்க வைத்துள்ளார்..
வாரம் முழுவதும் திருடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருட்டுக்கு லீவு விட்ட பிரியங்காவின் செயல், அருமனையை அதிர செய்து வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications