மயிலாடுதுறையே வியந்துடுச்சு.. யாருங்க இது? அதுவும் நம்ம ஊருல வந்து? சீர்காழியில் ஆச்சரியம்.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீர்காழியில் நடந்த ஒரு கல்யாணம், மொத்த மயிலாடுதுறைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு திருமணம் ஆகும்.. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபவம் என்பதால், வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும்.

Super motivation in Sirkali and Taiwanese love couple gets married in hindu Proceedure in Mayiladuthurai District

மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்.. இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்..

சீர்வரிசைகள்: இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது..

அதேபோல, தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அல்லது ஆண்கள், வெளிநாட்டு துணையை மணப்பதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் படித்துமுடித்துவிட்டு, வெளிநாடுகளில் வேலை பார்க்க நேரிடுகிறது.

வெளிநாடு: அப்போது, தங்களுடன் பணிபுரியும் நபர்களை விரும்பி, அவர்களையே மணப்பதும் உண்டு. அந்தவகையில் பல திருமணங்கள் தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி நடந்துள்ளன. வெளிநாட்டை சேர்ந்த மணப்பெண் அல்லது மாப்பிள்ளைகள், நம்ம ஊர் பட்டு வேட்டி, பட்டு சேலைகளை உடுத்தி, நகைகள், மாலைகளுடன் காட்சி தருவது, கண்களையே விருந்தாக்கிவிடும். ஆனால், சீர்காழியில் தற்போது நடந்துள்ள இந்த திருமணம் அதைவிட வித்தியாசமானதாக உள்ளது.

மணப்பெண்ணும் சரி, மணமகனும் சரி, இருவருமே நம்ம ஊரை சேர்ந்தவர்கள் இல்லை.. இவர்கள் இருவருமே தைவான் நாட்டை சேர்ந்தவர்கள். தைவான் நாட்டிலேயே இவர்களது காதல் அரும்பியிருக்கிறது.. இந்த காதல் ஜோடி சமீபத்தில் இந்தியாவுக்கு பறந்துவந்துள்ளது.. இங்கேயே இந்து முறைப்படி இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

வழிபாடு: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு சித்தர்புரத்தில் ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல், சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.

அப்படித்தான், தைவான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடி வந்துள்ளது.. மாப்பிள்ளை பெயர் யோங் ச்சென்.. இவர் ஒரு ஆராய்ச்சியாளர்.. மணப்பெண் பெயர் ருச்சென்.. இவர் ஒரு டீச்சர்.

காதல் ஜோடி இருவருமே இந்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டனர்... இவர்கள் 2 பேருமே காதலித்து வந்தபோது, இந்தியாவில்தான், இந்து முறைப்படி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்களாம்.. அதற்காகவே, தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்கள்.. சீர்காழியில் உள்ள ஒளிலாய நிர்வாகிகளிடம் சென்று, தங்களது ஆசையையும் சொல்லி உள்ளனர்.

அதற்கு பிறகுதான், இந்த திருமணம் இந்து முறைப்படி ஒளிலாலயத்திலேயே திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என தொடங்கி, சுபமுகூர்த்தத்தில், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து, புரோகிதர் மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க... ஜெகஜோதியாக இந்த கல்யாணம் நடந்தது.

மணமகன் பட்டு வேட்டி சட்டை, மணமகள் பட்டுபுடவை, நகைகள், பூக்கள் சகிதம் மணமேடையை அலங்கரித்தனர். அதுவும் மாப்பிள்ளைக்கு நெற்றியில் அந்த பளிச்சென்ற குங்குமப் பொட்டுதான் ஹைலைட்டே!!

வாழ்த்துக்கள்: இந்த கல்யாண போட்டோவும், வீடியோவும்தான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. மணமக்கள் யாரென்றே நமக்கு தெரியாவிட்டாலும், இவர்களது இந்த மங்கள கோலத்தை பார்த்ததுமே, இணையவாசிகள் பூரித்து போய் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. இந்த தைவான், இளஞ்ஜோடியை நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+