பிளானே இதான்.. சொன்னதை செய்த ஸ்டாலின்.. பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.. நாளை துவக்கம்
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அண்ணா பிறந்த தினத்தையொட்டி, மதுரையில் இந்த சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகளும் வெளியிடப்பட்டன.

நெல்பேட்டை
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, காலை 8 மணி அளவில் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏர்போர்ட்
இதற்காக, இன்று காலை 11.35 மணியளவில் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார் முதல்வர்.. இதைதவிர, வேறு சில நிகழ்ச்சிகளுக்காகவும் இந்த பயணத்தை முதல்வர் மேற்கொள்ள உள்ளார்.. அதுகுறித்த விவரங்களும் வெளியாகி உள்ளது.. இன்று மதுரையை சென்றடைந்த பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், பிறகு அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் செல்கிறார். மாலை 5 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல் தோட்டனூத்து என்ற இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

சமையல்கூடம்
அங்கிருந்து, மாலை 5.45 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார்... அண்ணா சிலைக்கு மாலை மதுரையில் அரசு விருந்தினர் இல்லத்தில் ஸ்டாலின் தங்குகிறார். நாளை காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10-வது நாளாக தொடர்ந்த ஆய்வுகளை, காலை 7.25 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 7.30 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

சிற்றுண்டி
அங்கு காலை உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். காலை சிற்றுண்டி திட்டம் பின்னர், காலை 8 மணிக்கு ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கு மாணவர்களுக்கு அவர் காலை உணவை பரிமாறுகிறார். பிறகு மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிடுகிறார்.

3 நாள் பிளான்
அங்கிருந்து காரில் விருதுநகர் வரும் முதல்வர், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலை விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொள்கிறார். 16-ந்தேதி காலை 9.15 மணிக்கு மதுரை மாரியட் ஓட்டலில் நடைபெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்கிறார். பிறகு மதியம் அங்கிருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார் என்று முதல்வரின் பயண திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications