சவுமியா அன்புமணி மாஸ் எண்ட்ரி.. விஜயகாந்த் மாதிரியே பாயிண்ட்டாக பேசி.. பாமகவினர் வேற லெவல் ஹேப்பி
: சவுமியா அன்புமணி சுற்றுசூழல் குறித்து இன்று சென்னை கூட்டத்தில் பேசினார்
சென்னை: அன்புமணி ராமதாஸ் மனைவியும், பசுமைத் தாயகம் தலைவருமான சவுமியா அன்புமணி பேசிய பேச்சால், பாமகவே குளிர்ந்து போயுள்ளது.. ரமணா படத்தில் விஜயகாந்த் பேசுவாரே, அதே போல, புள்ளிவிவரங்களுடன் கூடிய முக்கிய தரவுகளை தன்னுடைய விழிப்புணர்வு பேச்சில் வெளிப்படுத்தி உள்ளார் சவுமியா.
தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பவர் சவுமியா அன்புமணி.. ஆனால், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், சவுமியாவுக்கும் சீட் தரப்படப்போவதாகவும், தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் பரபரக்கும்.
கடந்த எம்பி தேர்தலை போலவே, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடர்ந்த நிலையில், 23 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்றிருந்தது பாமக. இந்த தேர்தலிலும் ராஜ்யசபா எம்பியான அன்புமணி ராமதாஸ் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வந்தன.. ஆனால், இதை பாமக நிர்வாகிகளே விரும்பவில்லை.

ராஜ்ய சபா உறுப்பினர்
காரணம், மாநில அரசில் மாற்றம்கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதால், நாம் வலிமையாக இருக்க மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அதனால், அன்புமணி ராஜ்யசபா உறுப்பினராகவே தொடரட்டும்... அதற்குப் பதிலாக நாம் இங்கு சௌமியா அன்புமணியை களமிறக்குவோம்" என்று சொன்னார்கள்.. தலைமையும் அதை பரிசீலித்தநிலையில், சென்னையில் ஒரு இடத்தை ஒதுக்கவும் பிளான் செய்யப்பட்டது.. அவரது பெயரை வேட்பாளர் தேர்வுப் பட்டியலில் இணைத்திருப்பதாகவும் கூட தகவல்கள் வெளியானது.. கடைசியில் எதுவுமே நடக்கவில்லை.

சவுமியா
அரசியலில் ஈடுபடாவிட்டாலும், பிற நற்காரியங்களில் சவுமியா அன்புமணி தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்.. குறிப்பாக, பசுமைதாயகம் பெயரில் பல்வேறு விழிப்புணர்வினை வருடந்தவறாமல் ஊட்டி வருகிறார்.. அந்த வகையில், உலக பூமி தினத்தையொட்டி சென்னையில் தூய காற்றுக்கான விழிப்புணர்வு பிரசாரம் பசுமைத்தாயகம் சார்பில் தி.நகரில் நடைபெற்றது.. பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார்.

நுண்ணிய மாசுத்துகள்கள்
இது தொடர்பான பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்த சவுமியா பேசியதாவது: "நுண்ணிய மாசுத்துகள்கள் நம் உடலின் நுரையீரலிலும் ரத்த ஒட்டத்திலும் ஆழமாக ஊடுருவி சென்று, மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களை, இந்த காற்று மாசுபாடுதான் உருவாக்குகிறது. சென்னையில் உலக சுகாதார அமைப்பு அனுமதிப்பதை விட 5 மடங்கு கூடுதலாக காற்று மாசுபட்டுள்ளது.

பிளாஸ்டிக் மாசு
சென்னையில் வருடத்துக்கு 11,000 பேர் காற்று மாசுபாட்டால் மட்டுமே உயிரிழக்கிறார்கள்.. இதனால், ஏற்படும் பொருளாதார இழப்பு ஆண்டுக்கு 11,000 கோடி ரூபாய் ஆகும்.. தனியார் வாகனங்களின் கட்டுக்கடங்காத அதிகரிப்பு, மாசுக்கட்டுப்பாடு விதிமீறல்கள், சாலைகளில் படிந்துள்ள புழுதி, பேருந்துகள் பற்றாக்குறை, நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதைகள் இல்லாமை, கட்டிடக் கழிவுகள், குப்பை எரிப்பு, பிளாஸ்டிக் மாசு, டீசல் ஜெனரேட்டர், அனல்மின் நிலைய மாசு உள்ளிட்டவை சென்னையின் காற்று மாசுபாட்டுக்கு காரணம்.

தூய காற்று செயல்திட்டம்
எனவே, சென்னையில் காற்று மாசுபாட்டினை தடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அறிவியல் பூர்வமான தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவது அவசியம்.. இதற்காக, ரிமோட் சென்சார் வாகனப்புகை சோதனை முறையை கொண்டுவர வேண்டும்... சாலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.. மரங்களை அதிகமாக்க வேண்டும்... குப்பை எரிப்பை தடுக்க வேண்டும்...

மெட்ரோ ரெயில்
12 வருடங்களாக இருக்கும் ஆணையத்தை செயலாக்க வேண்டும்... ரெயில், மெட்ரோ, பேருந்து, நடைபாதை, மிதிவண்டி வசதிகள் அனைத்தும் இணைந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து முறையை உருவாக்க வேண்டும்.. மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 மாசில்லாத தூய பேருந்துகளாக அதிகரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் சவுமியா அன்புமணி.. இந்த அளவுக்கு புள்ளிவிவர தரவுகளுடன், முழு விவரங்களையும் சவுமியா பேசியது, பாமகவை தவிர, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications