ராத்திரியெல்லாம் AC ஓடுதா? ஏசியை ரிமோட்டில் ஆஃப் பண்றீங்களா? அப்ப இதை மட்டும் செய்யாதீங்க! செம ஐடியா
சென்னை: வெயில் இன்னமும் வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஏசி தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது. ஏசி ஓடினாலும்கூட, கரண்ட் பில் மிச்சப்படுத்த இதோ குட்டி குட்டி டிப்ஸ்.
அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருப்பதால், அதிக வெப்பமும் புழுக்கமும் இன்னமும் நீடிக்கிறது.. கோடை மழை அவ்வப்போது பெய்து வந்தாலும், வெயில் தாக்கம் என்னவோ கட்டுக்கடங்காமல் உள்ளது.. அதனால்தான், வீடுகளில் AC, Air Cooler களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது.

ஏர்கூலர்: ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு சற்று அதிகம் என்றே சொல்லலாம்.. கரண்ட் பில்லும் அதிகமாகிவிடுகிறது.. ஏசியை அதிகமாக பயன்படுத்தினாலும், கரண்ட் பில் குறைவாக வரணுமா? இதோ ஒரு சில டிப்ஸ்களை பாருங்கள்.
ACயின் ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்வதாலும், ஏசியை முழுமையாக சர்வீஸ் செய்வதாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.. ஏனென்றால், இந்த ஏர் ஃபில்டர்களில் தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறைந்து, மின் இழுவையும் அதிகப்படுத்திவிடுகிறதாம்..
ஜன்னல்கள்: அதேபோல, ஏசி ரூம் கதவு, ஜன்னல்களை அடிக்கடி திறக்கக்கூடாது. காரணம், அனல் காற்று உள்ளே வந்துவிட்டால், மீண்டும் அறை முழுவதும் ஜில் காற்று பரவ நேரம் பிடிக்கும். இதனால் கரண்ட் பில் அதிகமாகிவிடும். ஏசியுடன் சேர்த்து சீலிங் ஃபேனையும் ஓடவிட்டால், குளிர்ந்த காற்று விரைவில் அறை முழுவதும் பரவிவிடும்..
இப்படிப்பட்ட சூழலில், மின்துறை அதிகாரிகள், ஏசிகளை பயன்படுத்துவது குறித்து ஒருசில டிப்ஸ்களை தருகிறார்கள்.. அதாவது, ஏசியை பொறுத்தவரை, ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்..
வெப்பநிலை: எப்போதுமே, குறைந்த வெப்பநிலையில் ஏசி-யை வைக்காமல் 16 அல்லது 18 டிகிரியில் வைக்க வேண்டுமாம்.. மனிதனுக்கு தேவைப்படும் சராசரி வெப்பநிலையானது 24 டிகிரி என்பதால்தான், இந்த 24 அளவிலேயே ஏசியை வைத்திருக்க சொல்கிறார்கள். குறைந்தது 25 லிருந்து 27 டிகிரி செல்சியஸில் ஏசி பயன்படுத்தும்போது, மின்பற்றாக்குறையும் ஏற்படாது என்கிறார்கள்.
ஏசி பயன்படுத்தும்போது, ஏசியின் ரிமோட்டையும் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும்.. ரிமோட்டில் ஏசி ஆன்செய்யும் போது, டைமரை செட் செய்து கொள்ள வேண்டும். அதாவது, அறை முழுவதும் குளிர்ந்ததுமே, ஏசி தானாகவே அணைந்து விடும்...
ரிமோட் கன்ட்ரோல்: அதேபோல, ஏசியை ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆப் செய்யக்கூடாதாம்.. ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் சேர்த்து ஆப் செய்ய வேண்டும் என்கிறார்கள்.. இதனால் மின்சாரம் கட்டணத்தை சுலபமாக சேமிக்க முடியும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் அறிவுறுத்தியிருக்கிறது.
ஏசி ரிமோட்டில் ஆஃப் செய்தாலும்கூட, அதன் பயன்பாடு இருந்துகொண்டுதான் இருக்கும்.. டைமர் செட் செய்த பிறகு ஏசி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகே, ஸ்லீப் மோடிற்கு செல்லுமே தவிர முழுமையாக ஆஃப் செய்யப்படுவதில்லை.. எனவே, ஸ்டெபிலைசர் சுவிட்சை ஆப் செய்தால் மட்டுமே கரண்ட் பில் அதிகம் வருவதை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் உறுதியாக சொல்கிறார்கள்..!!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications