Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதையில் அப்பாவிகளை தாக்கும் குண்டர்கள்! ஆதரவுக்கு வரும் உள்ளூர் அரசியல்வாதிகள்! சந்தோஷ் நாராயணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைக்கு அடிமையான குண்டர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல்வாதிகள் ஓடி வருவது வேதனை அளிப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் ஒடிஸாவை சேர்ந்த ஒரு இளைஞர் 17 வயது மதிக்கத்தக்க 4 சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

santhosh narayanan tiruttani

இதை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்து ரீல்ஸாக பதிவிட்டனர். இந்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில் 3 சிறுவர்கள், சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் இன்னொரு சிறுவர் அவரது பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சென்னையில் நான் வசிக்கும் ஒரு பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாகவே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில், போதைக்கு அடிமையான ரவுடிகளும், குற்றவாளிகளும் அப்பகுதி மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.

எனது ஸ்டூடியோ இருக்கும் பகுதியில் உள்ள கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பல அப்பாவித் தொழிலாளர்கள் சமீப காலமாகத் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி, கடும் போதையில் இருந்ததால், காவல்துறை தடியடி நடத்தியபோதும் வலி தெரியாமல் சிரித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தாக்குதல் நடத்துபவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது இனவெறியுடன் செயல்படுவதாகத் தெரிகிறது. உள்ளூர் அரசியல்வாதிகளும், சாதி அடிப்படையிலான சில அமைப்புகளும் இந்த இளம் குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி, எதிர்காலம் சீரழிந்து வருகிறது.

திரைப்படங்களில் வன்முறை புகழப்படுவதற்கும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்து வருகிறது. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க உடனடியாகவும், உரிய வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் தேதி 4 சிறுவர்கள் சேர்ந்து ஒடிஸா இளைஞரை வழிமறித்து பட்டாக்கத்தியால் தாக்குதல் நடத்தினர். தகவலறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த களரியாக இருந்த அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊருக்கே செல்வதாக போலீஸிடம் எழுதி கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் அந்த 4 சிறுவர்களும் போதையில் இருந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க், அவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச்செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் காட்சிப் பதிவாக சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+