வேனை முதலில் எடுய்யா! வெளியே போ! ஓபிஎஸ் ஓட்டுநரிடம் எல்லை மீறிய இபிஎஸ் ஆதரவாளர்கள்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் வாகன ஓட்டுநரை சூழ்ந்துகொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், வேனை வெளியே கொண்டு செல்லுமாறு ரவுண்டு கட்டினர்.
Recommended Video
இதனால் செய்வதறியாது திகைத்த ஓபிஎஸ் ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து வேனை சற்று தள்ளி நிறுத்தினார்.
ஆனாலும் அங்கேயும் சென்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், எல்லை மீறும் வகையில் வண்டியை மண்டபத்தை விட்டு வெளியே கொண்டு போ பிடிவாதம் பிடித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் வாகனம்
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வம் வழக்கமாக தாம் பயன்படுத்தும் இன்னோவா காரை தவிர்த்து பாதுகாப்பு கருதி பிரச்சார வேனில் பயணித்து வந்தார். அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தின் மேடை அருகே ஓ.பன்னீர்செல்வத்தை இறக்கிவிட்ட வேன் ஓட்டுநர் அந்த இடத்திலேயே திரும்பிச் செல்வதற்கு வசதியாக வேனை திருப்பி நிறுத்திவிட்டு காத்திருந்தார்.

எல்லை மீறல்
இது தான் பன்னீர் வந்த வேனா என்ற ஆவேசத்துடன் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், எடுத்த எடுப்பிலேயே வண்டியை முதலில் எடுய்யா என ஓபிஎஸ் ஓட்டுநரிடம் எல்லை மீறினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஓட்டுநரும் ஏதோதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தார். ஆனால் அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத இபிஎஸ் ஆதரவாளர்கள் வண்டியை எடுத்தாலே எடுக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றனர். மேலும், இப்படி வண்டியை வெளியே கொண்டு போவியா மாட்டியா என ஒருமையில் பேச ஆரம்பித்தனர்.

ஓபிஎஸ் டிரைவர்
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் ஓட்டுநர் வேறு வழியின்று அங்கிருந்து சற்று தள்ளிச் சென்று வேனை நிறுத்தினார். ஆனாலும் விடாத எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கேயும் சென்று ஓ.பன்னீர்செல்வம் டிரைவருக்கு குடைச்சல் கொடுத்தனர். இது தொடர்பாக அவர் யாரிடமோ தகவல் அளிக்க, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலரும் அங்கே திரளத் தொடங்கினார்.

எஸ்.ஐ.பாதுகாப்பு
இதனால் அங்கு அடிதடி உருவாகும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சென்று ஓபிஎஸ் வேனுக்கு பாதுகாப்பு அளித்தார். கூச்சல் போட்டுக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தார்.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக்












Click it and Unblock the Notifications