டைம் வரட்டும்.. வெயிட்! எடப்பாடியை “டீலில்” விட்ட டெல்லி.. “பாய்ச்சலுக்கு” ரெடியாகும் பன்னீர்
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த மேலும் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜூலை 11ம் தேதி இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

பறிபோன பதவி
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தது.

மீண்டும் பதவி
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதனை தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக மகுடம் சூட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் வேகமாக காய்களை நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் வைத்த செக்
ஆனால், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான உச்சநீதிமன்ற படியேறினார் ஓ.பன்னீர்செல்வம். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

டெல்லி கணக்கு
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் ஓ.பன்னீர்செல்ம் தரப்பினருக்கு நம்பிக்கை எழவே அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி இருக்கின்றனர். குறிப்பாக டெல்லியின் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

வெயிட் பண்ணுங்க
இதனால் உசிலம்பட்டி அய்யப்பனை தொடர்ந்து, அணி தாவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் பின்வாங்கிய எடப்பாடி அணியினர் மீண்டும் ஓ.பி.எஸ் அணியை கதவை தட்டத் தொடங்கி இருக்கிறார்களாம். ஆனால், அவர்களிடம் இப்போது வரவேண்டாம் என்றும், நீதிமன்ற வழக்கு முடிந்த பிறகு எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்வோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications