Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன் மனச்செம்மல் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் இன்று.. அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் பிறந்த நாள் 109வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.. எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களும், எம்ஜிஆர் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

திரைப்பட நடிகராக மக்களிடையே பேரன்பு பெற்ற எம்ஜிஆர், அரசியலில் சமூகநீதி மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர்.. மக்கள் நலத் திட்டங்களால் "புரட்சித் தலைவர்" என்ற பெருமை பெற்றவர்.

MGR M G Ramachandran AIADMK 109

எம்ஜிஆர் பிறந்த நாள் இன்று

பொதுவாக அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் அல்லது நினைவுநாளில் கட்சியினர் பொதுஇடங்களில் படங்களை வைத்து மரியாதை செலுத்துவார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் நினைவில், தொண்டர்கள் தங்கள் வீட்டு முன்பே அவரது போட்டோவை வைத்து, ஸ்பீக்கரில் பாடல்களை ஒலிக்க விட்டு, அவரது புகழை பாடுவது தனித்துவமான வழக்கமாக உள்ளது.

மேலும், தங்களால் இயன்ற அளவில் பானகம் வழங்குதல், அன்னதானம் செய்வது போன்ற மக்கள் சேவை செயல்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. சினிமாவும் அரசியலும் என இரு துறைகளிலும் உச்சத்தைத் தொட்ட எம்.ஜி.ஆரின் தாக்கம், இன்றும் அவரது தொண்டர்களின் செயல்பாடுகளில் உயிரோட்டமாகத் தொடர்கிறது.

வாத்தியார் பிறந்தநாள்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் எங்கள் வாத்தியார் MGR அவர்களின் பிறந்தநாள்!

தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க, அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம், திரை ஆளுமையாக தத்துவங்களையும், முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும் அள்ளித் தந்த பொன்மனச் செம்மல், இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில்,

புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்! வாழ்க புரட்சித்தலைவர் நாமம்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக எடப்பாடி பழனிசாமி

முன்னதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயலகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள், ஜன.17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்குகிறார்.

கட்சியினர் அனைவரும், தங்கள் பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்ஜிஆர் படங்களை வைத்து மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நாளை, நாளை மறுநாள் பொதுக்கூட்டம்

அதேபோல அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 18, 19 தேதிகளில் தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாளை 18ம் தேதி தென் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். இதே நாளில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. நாளை 19ம் தேதி திண்டுக்கல் கிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, நாமக்கல், திருப்பூர் மாநகர், வட சென்னை கிழக்கு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னணி அதிமுக தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+