சர்ச்சையான விவாதம்.. ஜோதிமணிக்கு குவிந்த ஆதரவு.. தேசிய அளவில் டிரெண்டான #I_Stand_With_Jothimani
காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு ஆதரவாக டிவிட்டரில் #I_Stand_With_Jothimani என்ற டேக் வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு ஆதரவாக டிவிட்டரில் #I_Stand_With_Jothimani என்ற டேக் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்ட டிவி விவாத நிகழ்ச்சி ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. பாஜகவின் மூத்த உறுப்பினர் கரு. நாகராஜன் அந்த நிகழ்ச்சியில் எம்.பி. ஜோதிமணியை தவறாக பேசியதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது,.
கரு. நாகராஜன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜோதி மணி பாதியில் வெளியேறினார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக எம்பி கலாநிதி வீராசாமியும் விவாதத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஆதரவு டிரெண்ட்
இந்த நிலையில் ஜோதிமணிக்கு ஆதரவாக பலரும் இணையத்தில் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். தமிழக அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் ஜோதிமணிக்கு ஆதரவாக குரல்கள் பதியப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சியினர் ஜோதிமணிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இதனால் தேசிய அளவில் தற்போது #I_Stand_With_Jothimani என்ற டேக் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அரசியலில் பெண்கள் இப்படித்தான்
அரசியலில் பெண்களை இழிவாக பேசுவது இப்போது அதிகமாகிவிட்டது. அதிலும் துணிச்சலாக குரல் கொடுக்கும் பெண்ணின் குரலை ஒடுக்கவே நினைக்கிறார்கள். ஆனால் ஜோதிமணி அதற்கு எதிராக துணிச்சலாக பேசி, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார், என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பின்னணி
ஜோதிமணி எம்பி என்பவர் எந்தவிதமான பெரிய பின்னணியும் இன்றி அரசியலுக்கு வந்தவர். அவர் மிக சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் தற்போது இருக்கும் இடத்தை அடைய மிக கடுமையாக முயன்றார். அவரை பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் தாக்குவது வழக்கமாகி உள்ளது.

சிறப்பான மனிதர் அவர்
ஜோதிமணி மிக சிறப்பான மனிதர்... அவருடன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிற்க வேண்டியது மிக அவசிய தேவை என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் இப்படித்தான்
ஆண்கள் எப்போதுமே பல இடங்களில் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள், எதிர்க்கிறார்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். குறிப்பாக தங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களை அவர்கள் எதிர்க்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருந்து துணிச்சலாக பேசிவிட்டு ஜோதிமணி வெளியேறியதை நன் பாராட்டுகிறேன், என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொது மேடை பெண்கள்
பொது மேடையில் எப்போதும் ஒரு பெண்ணை இகழ கூடாது. ஜோதிமணி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பி . அவருக்கு எப்போதும் எங்கள் ஆதரவும் இருக்கும். நீங்கள் தமிழ் மண்ணின் நம்பிக்கை. உங்களுக்கு எங்கள் ஆதரவை தருகிறோம், என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
-
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications