சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த முரளிதர்- சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றவர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த முரளிதர் நியமிக்கப்பட உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித்

தலைமையிலான கொலிஜியம் (கொலீஜியம்) குழு இப்பரிந்துரை செய்துள்ளது.

Supreme Court collegium proposes Orissa CJ Justice Muralidhars transfer to Madras High Court

ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார் நீதிபதிமுரளிதர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி முரளிதர், சென்னை சட்டக்

கல்லூரியில் படித்தவர். 1984-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார்.

பின்னர் 1987-ம் ஆண்டு முதல் டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார். 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக
நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்து பட்டியலை வெளியிடாவிட்டால் தகவல் அறியும் சட்டத்தில் அவர்களது பெயர் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டவர்
நீதிபதி முரளிதர். 1984-ம் ஆண்டு டெல்லி சீக்கியர் இனப்படுகொலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என உறுதி செய்து
தீர்ப்பளித்தார். மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்ட கவுதம் நவ்லாக்காவுக்கு ஜாமீன் வழங்கியவர்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி வன்முறை சம்பவங்களில் பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட்டார் நீதிபதி முரளிதர். அதனைத் தொடர்ந்து பஞ்சாப்-
ஹரியான உயர்நீதிமன்றத்துக்கு உடனடியாக மத்திய பாஜக அரசால் இடம்மாற்றமும் செய்யப்பட்டார். இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ஒடிஷா
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார் நீதிபதி முரளிதர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி முரளிதர் நியமிக்கப்பட உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான கொலிஜியம் குழு நீதிபதி முரளிதரை பரிந்துரை செய்துள்ளது.

English summary
The Supreme Court collegium proposes Orissa CJ Justice Muralidhar's transfer to Madras High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X