ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
டெல்லி: ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 3.50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு
இதன் காரணமாக மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் ஆலையை இயக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு தொடரப்பட்டது .

நீதிமன்றம் கருத்து
நாட்டில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசே இயக்கி ஏன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பிருந்தது. இருப்பினும், இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது, ஆலையை இயக்கும் நிபுணத்துவம் தங்களிடம் மட்டும் தான் உள்ளதாக தெரிவித்தது.

அனைத்துக் கட்சி கூட்டம்
இந்நிலையில், இது குறித்து ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆக்சிஜன் தேவைக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் எனத் தெரிவித்தனர். அதில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஆலையை திறப்பது அரசின் நோக்கம் இல்லை என்றும் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் அலையை 4 மாதங்கள் மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தார். இது தொடர்பான தீர்மானமும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்று விசாரணை
உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில்,அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், ஸ்டெர்லைடை மீண்டும் திறக்க ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னுரிமை தர முடியாது
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வாதிட்டனர். ஆனால் ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள் தான் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுப்போம் என்றும் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்திற்குக் கொடுக்க முன்னுரிமை தர முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு விநியோகிப்பதைத் தடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

உள்ளூர் மக்கள் இடம் பெறக் கூடாது
வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்றம் அனுமதி தந்த 10 நாளில் ஆக்சிஜன் உற்பத்தியை ஆரம்பித்து விடுவோம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் தயாரிக்கும் அளவுக்குத் திறன் உள்ளது என்றும் தெரிவித்தனர். அதேநேரம் இதற்கு அமைக்கப்படும் கண்காணிப்புக் குழுவில் உள்ளூர் மக்கள் இடம் பெறக் கூடாது என்றும் வாதிட்டனர். ஏற்கனவே உள்ளூர் மக்களில் சிலரால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்.

ஆலையை திறக்க அனுமதி
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆலையின் செயல்பாட்டைக் கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உத்தரவிட்டனர். அதில் தமிழக அரசிடம் ஆலோசித்து உள்ளூர் மக்கள் 2 பேரை நிபுணர் குழுவில் இடம்பெறச் செய்யலாம் என்றும் தெரிவித்தனர். மேலும், ஆலையை திறக்க தற்காலிகமாகவே உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகக் கூடிய ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications