ஒரு பாலின திருமணம் சட்டப்பூர்வமாகுமா? விசாரணை நிறைவு- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
சென்னை: ஒரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்திவைத்தது.
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தது.

திருமணம் என்பது ஒரு ஆண், பெண் இடையேயான உயிரியல் ரீதியான உறவு. இத்தகைய உறவுகளுக்கு அப்பாலான தன்பாலின அல்லது ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் என்பது புதிய சட்டம் இயற்றுதலாகும். ஒருதரப்பு வாதத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் கேட்கவும் கூடாது என்றது மத்திய அரசு.
ஆனால், ஒரு ஆண், பெண் அவர்களது பிறப்பு உறுப்பு தொடர்பானது அல்ல இந்த வழக்கு. இத்தகைய வழக்குகளில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்தை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. பொதுவான திருமண சட்டத்தில் இருந்து விலகி சிறப்பு திருமண சட்டத்தில் ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு நிவாரணம் வழங்க முடியுமா? என்பதை நீதிமன்றம் ஆராய்கிறது என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட்.
மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, என் தரப்பினரின் திருமண உரிமையை மறுப்பது என்பது குடியுரிமையை மறுப்பதாகும். அப்படியானால் இதர குடிமக்களுடன் இணைந்தவராக இல்லாமல் ஒரு குற்றவாளியாக கருதப்படுவார். இது தவறான அணுகுமுறை என்றார். இந்த வழக்கில் இன்றும் உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்கள் இடம்பெற்றன. மாநில அரசுகள் அனைத்தையும் வழக்கில் சேர்த்து கருத்து கேட்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மாநில அரசுகளின் கருத்துகளையும் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. மாநில அரசுகளும் தங்களது கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து விசாரணைகளையும் நிறைவு செய்தது. அத்துடன் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications