எடப்பாடிக்கு பெரிய சிக்கல்? நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பான வழக்கு.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
சென்னை: நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு வழங்கியது தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. ஒபிஎஸ் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமியும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பன்னீர்செல்வமும் மாற்றி மாற்றி கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.
ஒற்றை தலைமை கட்சியை வலுப்படுத்தும் என்று எதிர்பார்த்த அதிமுக தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.

எடப்பாடி பழனிசாமி
தற்போதைய சூழலில் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி தரப்பிற்கே ஆதரவு சற்று அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கட்சி கணக்கு மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான உத்தரவுகளும் எடப்பாடி தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வருவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

புகார்
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாகப் பலரும் புகார்களை எழுப்பினர். தமிழக சட்டசபையிலும் கூட இது குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும், இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018இல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.

சென்னை ஐகோர்ட்
இருப்பினும், அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று திமுக தரப்பு தெரிவித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018இல் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

இடைக்கால தடை
மேலும், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது தொடர்பாக நோட்டீசும் அனுப்பப்பட்டு இருந்தது.

நாளை விசாரணை
இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இன்று காலை முறையீடு செய்யப்பட்டது. அப்போது வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி தொடர்பான இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளைய தினமே விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது. நாளை 15ஆவது வழக்காக இது விசாரணைக்கு வர உள்ளது.

இன்று விசாரணை
இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நேற்று காலை முறையீடு செய்யப்பட்டது. அப்போது வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி தொடர்பான இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று ஜூலை 26 விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது. இன்று 15ஆவது வழக்காக இது விசாரணைக்கு வர உள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications