Karur case: கரூர் கேஸில் தமிழக அரசின் வாதத்தை ஏற்காத உச்ச நீதிமன்றம்! நீதிபதிகள் சொன்ன ’பாயிண்ட்’
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள்," நியாயமான பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், ஜூலை 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதில் 18 பெண்கள், 5 சிறுவர்கள், 13 ஆண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் "காவல் துறை போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே காரணம்" என அரசை குற்றம்சாட்டினர். அதேவேளையில், தமிழக அரசு சார்பில் விஜயே காவல் துறையின் வழிகாட்டுதல்களை மீறி, தாமதமாக வந்ததால் தான் இந்த விபத்து நடந்தது என வாதிடப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல்
கரூர் போலீசார் தொடக்கத்தில் வழக்கை பதிவு செய்து விசாரணை தொடங்கினர். ஆனால், பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்து, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக தவெக தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் மனுவில், அஸ்ரா கார்க் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருப்பது தவறு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு
இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்டபின், நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு,"சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவுகளும், மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. விசாரணை நடைமுறைகள் உரிய விதத்தில் பின்பற்றப்படவில்லை" என கூறி வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது.
சிபிஐ விசாரணை
அதில் கரூர் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐ நடத்தும் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு கண்காணிக்கும் எனவும், இதற்காக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. இதில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும் எனவும், அந்த ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழர்களாக இருக்கக் கூடாது என உத்தரப்பட்டுள்ளது.
நியாயமான விசாரணை
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு வாதங்கள் இரு தரப்பிலும் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நியாயமான பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை. இதனை மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதை உச்ச நீதிமன்றம் கருதுகிறது" என குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications