டென்சனில் பொன்முடி..இப்படி ஒரு நல்ல நீதிபதியா? ஆனந்த் வெங்கடேசை பாராட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின், சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறையால் செய்யப்பட்டது. இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

பல்வேறு கட்டங்களாக அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்வதாக வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 1996 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது 3,630 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2003 ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி உட்பட 10 பேரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கிடையே பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதுடன், அவரும் 2 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்டு ஜூன் 28 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை கையில் எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கின் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்டு மாதம் விசாரணைக்கு எடுத்தார். நீதித்துறை வரலாற்றிலேயே இது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதனை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பொன்முடியின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். மேலும், "ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்." என அவர் கூறினார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications