உச்சநீதிமன்ற தீர்ப்பால் இனி எந்த மாநிலத்தையும் துண்டு துண்டாக கூறு போடலாம்- எச்சரிக்கும் திருமாவளவன்
சென்னை: ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, "இனி எந்தவொரு மாநிலத்தையும் துண்டுத் துண்டாகக் கூறுபோடமுடியும் என்கிற நாசகாரப் போக்கிற்கு வழிவகுக்கும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்பியுமான தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் பரிந்துரை இல்லாமலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் விவாதப் பொருளாகின.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது: 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்தது சரியே' என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே இது அயோத்தி தீர்ப்பைப் போலவே அமைந்துள்ளது. எனவே, அதிர்ச்சி இல்லை. ஆனால் அச்சம் மேலிடுகிறது.
கடைசி நம்பிக்கையாகவுள்ள உச்ச நீதிமன்றத்தின் மீதான மதிப்பீடு கேள்வி குறியாகி உள்ளது. அரசமைப்புச்சட்டம் உறுப்பு எண்-370 இடைக்கால ஏற்பாடு என்பது வரலாற்று உண்மைகளைப் புதைக்கும் மாபெரும் துரோகம்.
இனி எந்தவொரு மாநிலத்தையும் துண்டுத் துண்டாகக் கூறுபோடமுடியும் என்கிற நாசகாரப் போக்கிற்கு இது வழிவகுக்கும். யாரைக் கடிந்து கொள்வது? இனி என் செய்வது? என்னும் இயலாமையே எஞ்சுகிறது. இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications