மாயமாகி வரும் மன்னார் வளைகுடா தீவு.. கடலில் மூழ்க போகும் கரியாச்சல்லி தீவு.. அரசு அதிரடி முடிவு
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்தது. அதாவது கரியாச்சல்லி தீவு 1969ல் 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால் 2018ல் 5.97 ஹெக்டேராக சுருங்கியது. நிபுணர்களின் கூற்றுப்படி, கரியாச்சல்லி மற்றும் கசுவாரி தீவுகள் 2035க்குள் மூழ்கிவிடுமாம். இந்நிலையில் கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது. ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது.

மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன்று கரியாச்சல்லி தீவு.போதிய பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ள இத்தீவை காப்பாற்ற உலக வங்கியின் ஆதரவுடன் தமிழக அரசு ரூ.50 கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. 'தமிழ்நாடு ஷோா்' (நிலையான பெருங்கடல் வளங்களை பயன்படுத்துதல்) என்ற முன்முயற்சியின் அங்கமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கும்
மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு என்பவது 1969-ஆம் ஆண்டில் 20.85 ஹெக்டேரில் இருந்தது. ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டில் வெறும் 5.97 ஹெக்டேர் என்கிற அளவில் சுருங்கி போனது. கடல் அரிப்புகள் தொடா்ந்தால் 2036 -ஆம் ஆண்டில் இத்தீவு முற்றிலுமாக மறையும் அபாயத்தில் இருப்பதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவினை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது.
மீனவர்கள் நம்பிக்கை
அதன்படி கடுமையான கடலோர அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும். கடல்வாழ் பல்லுயிா் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் தீவின் உயிா்வாழ்வு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.அரசின் இந்த திட்டத்தை மன்னார் வளைகுடாவை சுற்றியுள்ள மீனவர்கள் மிகப்பெரிய நம்பிக்கையாக பார்க்கிறார்கள்.
செயற்கை பவளப்பாறைகள்
கரியாச்சல்லி தீவினை காப்பாற்ற தீவு முழுவதும் 8,500 பல்நோக்கு செயற்கை ரீஃப் எனப்படும் பவளப்பாறைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை பவளப்பாறைகள், அலை இயக்கவியல் (வேவ் டைனாமிக்ஸ்) மற்றும் ஆழ்கடல் படுகை அளவீட்டு (பாத்திமெட்ரி) ஆய்வுகளின் அடிப்படையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை பவளப்பாறை கட்டுமானம் விரைவில் தொடங்கும் என்றும் அதைத் தொடா்ந்து ஐஐடி பரிந்துரைத்த இடங்களில் தீவைச் சுற்றி செயற்கை பாறைகள் அமைக்கப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனா்.
என்ன நடவடிக்கை
மேலும் கரியாச்சல்லி தீவின் நான்கு பக்கமும் சீரான உயரத்தைக் கொண்ட ஃட்ரோஸாய்டல் என அழைக்கப்படும் தடுப்புகள், சிமென்ட் போன்ற கலவை, எஃகு ஆகியவற்றால் உருவாக்கப்பட உள்ளது. உயரத்தில் 2 மற்றும் 3 மீட்டரும், எடையில் 1.8 மற்றும் 3 டன் எடையும் கொண்டிருப்பதால் அலையின் வேக ஆற்றலை குறைக்க உதவியாக்கும். இது வண்டல் படிவை ஊக்குவிக்கவும் வகையில் இருக்கும் என்றும். இதன் மூலம் இப்பகுதியில் கடல் உயிரினங்கள் வாழ்விடங்களை உருவாக்கும் சூழல் உருவாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வான் தீவு மீட்பு
முன்னதாக இதேபோல் சிக்கலை எதிர்கொண்ட வான் தீவு வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான கடலடிப்பவளப்பாறைகள் பரப்பை அதிகரித்து, சுற்றியுள்ள நீரை ஆழமற்றதாக்கி, வண்டல் குவிப்பை அதிகரித்திருந்தது. இதனால் அங்கு 37-க்கும் அதிகமான துணை மற்றும் பெரிய பவளப்பாறைகளில் வாழும் கடல்வாழ் இனங்கள் பெருகின.
சுற்றுச்சூழல் மீட்பு
இதை முன்மாதிரியாகக்கொண்டுதான் செயற்கை கடலடிப்பவளப்பாறைகள் உருவாக்கப்படுகிறது. எனவே கரியாச்சல்லி தீவின் கரையோரப் பகுதிகளை நிலைத்திருக்கவும் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் வாய்ப்பாக அமையும் என நிபுணர்கள் நம்புகிறார்கள். இத்தீவின் 10 கி.மீ சுற்றளவில் வைப்பாறு, சிப்பிகுளம், பட்டினமருதூா் போன்ற கடலோர கிராமங்கள் இத்திட்டத்தால் பயனடையும் என்பதால், அந்த கிராம மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
சுப்ரியா சாஹு ஐஏஎஸ்
மன்னாா் வளைகுடா மறுசீரமைப்புத் திட்டம் குறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு கூறுகையில், கரியாச்சல்லி தீவில் கடல் அரிப்பை கட்டுப்படுத்தும் வகையில், முறையே 2 ஏக்கா் மற்றும் 3 ஏக்கா் பரப்பளவில் அழிந்துபோன பவளப்பாறைகள் மற்றும் கடல் புல்படுக்கைகள், அறிவியல் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் மறுசீரமைக்கப்பட உள்ளது. இந்த முயற்சியால் மன்னாா் வளைகுடா ஒரு வளமான கடல் வாழ்விடமாக மாறும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications