மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. வீடுகளில் மின் கட்டணம் மாறுது.. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்
சென்னை: வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது..
தமிழக மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இதற்கான டென்டரும் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்தன.

அதாவது, 25,000 தொழில் நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக மின்வாரியம் செயல்படுத்தப்போவதாகவும், இதற்காகவே மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், சிம் கார்டு வாங்குவதுடன், மென்பொருள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஸ்மார்ட் மீட்டர் வசதிகள்
இந்த ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தவரை, மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, சாப்ட்வேர் வடிவில் அப்லோடு செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, சர்வரில் இணைக்கப்படுவதால், குறிப்பிட்ட தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோருக்கு கட்டணம் அனுப்பப்பட்டுவிடும்.
இதற்காக, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சிம்கார்டு மூலமாக கிடைக்கும் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்த திட்டத்துக்கு பல ஆண்டுகளாகவே டெண்டர் விடப்படும் பணிகள் நடந்தன.. ஆனால் அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.. கடந்த வருடம்கூட, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டெண்டர் கோரப்பட்டது. ஆனால், அதுவும் ரத்து செய்யப்பட்டது.
அதானி நிறுவனமும் ரத்து
பிறகு 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று இருந்தன..
இதில், அதானி நிறுவனம் தான் 4 நிறுவனங்களில் மிக குறைவான தொகையை கூறியிருந்தது. ஆனால், தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனத்தின் தொகை அதிகமாக இருந்ததால், அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. எனவே, ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரானது மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இப்போது இதுகுறித்துதான் முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.
மீண்டும் டெண்டர்
தமிழகத்தில் வீடுகளில் ஆளில்லாமல், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்த தீவிரமாகி வருகிறது.. சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டம் நடந்தது.
அதில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, மீண்டும் டெண்டர் கோருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, விரைவில் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications