Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்வாரியம் சர்ப்ரைஸ்.. இந்த 3 நாளை நோட் பண்ணுங்க.. கரண்ட் பில் மாற்றம்? தமிழக மின்சார வாரியம் மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக மக்களுக்கு மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தகவல் வெளியாகி, தமிழக மக்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை அதிகரித்துள்ள போதிலும், கூடுமான வரையில், பாதிப்பு இல்லாமல், சீரான மின்விநியோகம் செய்யப்பட தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.. இதற்கு காரணம், கடந்த வருடம் அதே அளவு மின் உற்பத்தியும் கொள்முதலும் இருந்ததால் பற்றாக்குறை பெரிதாக ஏற்படவில்லை.

Surprise Announcement by Tamil Nadu Electricity board and There is no power cut in Tamil Nadu for 3 days


மின்தடை: அதேபோல, மின்தடையும் பெரிதாக ஏற்படாமல், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபடியே உள்ளது.. இதற்காக மின்வாரிய ஊழியர்களுக்கு பிரத்யேக உத்தரவும், அறிவுறுத்தலும் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டே வருகிறது.

முக்கியமாக, ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் உள்ள மின் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்கு ஏற்ப, மின் கட்டணம் வசூலாகிறதா? என்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது..

மின்மீட்டர்கள்:
அதேபோல, மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும், நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் மின்துறை கூறிவருகிறது.. அதுமட்டுமல்ல, அடிக்கடி மின் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக பணியாளர்களை டிரான்ஸ்வர் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டும் உள்ளது.

அதுமட்டுமல்ல, மின்வாரியத்தின் இயந்திரங்களில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின் பயன்பாடு இருப்பதால், அதிக வெப்பநிலை மற்றும் கோளாறு காரணமாக மின்விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.. இவற்றை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு போதிய இடைவெளியில் முறையாக மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னறிவிப்புகள்:
அதனால்தான், மாநிலம் முழுவதும் பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்புகளோடு மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்தடைக்கான நேரம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிடும். இதற்கெனவே பிரத்யேகமான வெப்சைட்கள் உள்ளன.

https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற வெப்சைட்டிற்கு சென்றால், உங்கள் மாவட்டம் அல்லது உங்கள் பகுதியை செலக்ட் செய்தால் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை எப்போது ஏற்படும் எந்த நாளில் ஏற்படும் எவ்வளவு நேரம் ஏற்படும் என்பதை உங்களால் அறிய முடியும்.

மின்தடை: இந்த அறிவிப்புக்கு ஏற்ப பொதுமக்களும் தங்கள் பணிகளை திட்டமிட்ட கொள்ள வசதியாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தின் மாவட்டங்களில் வரும் நாட்களுக்கான மின்தடை குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நாளை பிப்ரவரி 24, 25 மற்றும் 26 ம் தேதிகளான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை 3 நாட்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்தடை செய்யப்படாது என்று மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக செலவழிக்கும்வகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பானது அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+