சர்ப்ரைஸ் தந்த தமிழக அரசு.. சென்னைவாசிகளுக்கு "ஒருநாள்" ஜாக்பாட்.. வண்டிகள் ரெடி.. பக்தர்கள் ரெடியா?
சென்னை: ஆடி மாதம் துவங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இது சென்னை பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
சிவன், அம்பிகை, பெருமாள், முருகனுக்கு சிறப்புடையதாக கருதப்படுவது பௌர்ணமியாகும்.. அதிலும், ஆடி மாத பெளர்ணமி என்றாலே சற்று விசேஷமானதாகும்.. காரணம், இந்த நாள் விநாயகரை வழிபடுவதற்கு உகந்ததாகும்.. அத்துடன், இந்த பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும்.

எனவே, ஆடி பெளர்ணமியின்போது, அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, விநாயகரையும் சேர்த்து வழிபடுவார்கள்.. அந்தவகையில், இந்த வருடம் ஆடி பெளர்ணமியானது வருகிற ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜூலை 20ம் தேதி மாலை 06.10 மணி துவங்கி, ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை பெளர்ணமி திதி உள்ளது என்றாலும், 21ம் தேதியே கணக்கில் கொள்ளப்படுகிறது.
சிறப்பு பஸ்கள்: அதனால்தான் வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பஸ்களும், நாளை மறுநாள் பவுா்ணமி தினத்தை முன்னிட்டு 15பஸ்களும், நாளை மறுநாள் பவுா்ணமி தினத்தை முன்னிட்டு 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன..
பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் 30 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆடி மாதம் வழிபாடு: இதுஒருபுறமிருக்க, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவில்களுக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.. அதில் கட்டண விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
"பாரிமுனை-காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்வாயல் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணம் ரூ.1000.
அம்மன் கோயில்: மற்றொரு அம்மன் சுற்றுலா திட்டமானது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், முண்டககண்ணி அம்மன், கோல விழியம்மன், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.800.
திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்" என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
டபுள் குஷி: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications