பார்க்கறதுக்கு அப்படியே கோழி முட்டை.. சையத் வீட்டில் குபுகுபுவென நுழைந்த கூட்டம்! கர்நாடகா ஆச்சரியம்
சென்னை: பழுப்பு நிற முட்டைகள் அதிக இயற்கையானது இல்லை என்கிறார்கள்.. வெள்ளை முட்டைகள் பிளீச்சிங் பவுடர் போட்டு வெண்மையாக்கப்படுவதில்லை. நீலம், பச்சை நிற முட்டைகளை போல இவையும் முழுவதுமாக இயற்கையானவையே. ஆனால் உண்மையில் அனைத்து கோழி முட்டைகளும் உட்புறம் ஒரே மாதிரி தான் இருக்கின்றன.. அப்படி ஒரே விதமான பறவைகளின் முட்டைகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? கர்நாடக மாநிலத்தில் நடந்த ஆச்சரிய சம்பவம் என்ன?
சமீபத்தில், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஒரு கோழி முட்டையிடுவதற்கு பொதுவாக 26 மணிநேரம் ஆகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முதலில், கோழியின் கருப்பையில் முட்டையின் மஞ்சள் கரு உருவாகி, பிறகு 3 மணி நேரத்திற்குள், மஞ்சள் கருவைச் சுற்றியுள்ள வெள்ளைப் பகுதி அல்லது ஆல்புமின் உருவாகிறது.

வெள்ளை முட்டை உருவாகிறது
இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்குள், ஓட்டின் கீழ் உள்ள சவ்வு உருவாகிறது. பிறகு முட்டை வால் அருகே உள்ள செல் சுரப்பிக்கு நகர்கிறது. இப்போதுதான் கடினமான மேல் ஓடு உருவாகும்..இதற்கு 20 மணி நேரம் ஆகும்.. இறுதியில் வெண்மை நிற முட்டைகளே கிடைக்கின்றன. ஆனால் கடைசி நேரத்தில், முட்டைகளிலிருந்து சாயம் சேர்க்கப்படுகிறது. இந்த நிறம் கோழியின் உடலில் காணப்படும் ஒரு நிறமியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அதேபோல, மன அழுத்தத்திலுள்ள கோழிகளின் முட்டைகளின் நிறம் அல்லது அவை வயதாகும்போது லேசாகத் தொடங்கும்போது, இப்படி கலர் சேர்க்கிறார்களாம். பொதுவாக, இரட்டை இனக் கோழிகள், அதாவது முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் பழுப்பு நிறக் கோழிகள், பழுப்பு நிற முட்டைகளையே இடுகின்றன.
பழுப்பு நிற முட்டை
இந்த பழுப்பு நிற முட்டைகளில் சற்று அதிகமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இப்படி ஏராளமான ஆய்வுகள் முட்டைகளை பற்றி நடந்து கொண்டிருக்கின்றன.
அதேபோல, அரௌகானா, அமௌகானா, ஆலிவ் எக்கர் போன்ற கோழிகளின் வகைகள் பச்சை, நீல நிறத்தில், பச்சை நிறத்தில் முட்டைகளை இடுவதாக சொல்கிறார்கள்.. இந்த அரௌகானா கோழிகள் சாதாரண கோழிகளை போலவே இருக்கும். வெள்ளை முட்டை போலவே, இந்த முட்டைகளின் அளவு, வடிவமும் இருக்கும்..
இந்த நிற மாற்றத்துக்கு உறுதியான காரணம் இதுவரை தெரியயவில்லை.. ஆனால் கோழிகள் ரெட்ரோவைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
கர்நாடகா ஆச்சரிய தகவல்
இந்நிலையில் கர்நாடகத்தில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. பொதுவாக கோழி வெள்ளை நிறத்தில் முட்டையிடுவது வழக்கம். ஆனால் இங்கு கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது.
விசன்னகிரி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சையத் நூர் என்வர் தன்னுடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி, நீல நிற முட்டையிட்டுள்ளது. இதை பார்த்து சையத் நூர் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சையத் வீட்டில் கூட்டம்
கோழியிட்ட நீல நிற முட்டையை பார்க்கவே சையத் வீட்டில் கூட்டம் கூடிவிட்டது.. சிலர் இதனை செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.. நீலநிற கோழி முட்டையை பார்த்து பலரும் வியப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சன்னகிரி கால்நடைபராமரித்துறை உதவி இயக்குனர் அசோகா சொல்லும்போது, "நீல நிறத்தில் கோழி முட்டை இருப்பதற்கு, மெடுசில் உள்ள பிலிவர்டின் எனப்படும் நிறமி காரணமாக இருக்கலாம்.
முட்டையின் மேல் பகுதி ஓடு மட்டுமே நீல நிறத்தில் இருக்கும். உள்பகுதியில் வெள்ளை, மஞ்சள் கரு இருக்கும். முதல்முறையாக. கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. தொடர்ந்து நீல நிற முட்டையிடும் பட்சத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்படும்:" என்று தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications