அங்கன்வாடி ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்! தமிழக அரசு தந்த ஸ்வீட் நியூஸ்.. ஜாலியில் பணியாளர்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு குட்நியூஸ் ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அத்துடன் அது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டு உள்ளது. இதனால் தங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறிய சந்தோஷத்திலும், பூரிப்பிலும் உள்ளனர் அங்கன்வாடி பணியாளர்கள்.. அத்துடன் அரசுக்கும் நன்றி சொல்லி வருகின்றனர்..!!
அங்கன்வாடி ஊழியர்கள் என்பவர்கள் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அடித்தளமாக விளங்கும் சமூக பணியாளர்கள்...

அங்கன்வாடி பணியாளர்கள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் இவர்கள், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவது, அவர்களின் வளர்ச்சியை பேணி காப்பது, ஆரம்ப பள்ளிக் கல்விக்கு அவர்களை தயார் செய்வது போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருபவர்கள்..
இதனை தவிர, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து ஆலோசனைகளையும், தடுப்பூசி விழிப்புணர்வையும் வழங்கி ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தை வேரிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை இவர்கள் சுமக்கிறார்கள்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது...
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை
ஆம், வழக்கமாக அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதத்தின் வெவ்வேறு வாரங்களில் சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படுவதுதான் நடைமுறையில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் முழுமையான விடுமுறை வழங்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்..
அவர்களின் கோரிக்கையை ஏற்று, சமூக நலன் மற்றும் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு சர்ப்ரைஸ்
இந்த உத்தரவின்படி, தமிழகத்திலுள்ள அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் மே 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை 31 நாட்களுக்குக் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 3வது வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4வது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
அரசாணை ஸ்வீட் நியூஸ்
இந்த விடுமுறை நாட்களில் மாற்றுப் பணியில் குழந்தைகளுக்கு உணவூட்டும் பணிகள் எந்த இடையூறுமின்றி நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனை அரசு ஏற்று, மே மாதம் முழுவதும் அதாவது 1.5.2026 முதல் 31.5.2026 முடிய 31 நாட்களுக்கு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை
கோடை விடுமுறை காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட முன்பருவ கல்வி பயிலும் மைய குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 24 வேலை நாட்களுக்கு 1,200 கிராம் சத்துமாவாக வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
பணியாளர்கள் விடுமுறையில் இருந்தாலும், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணிகள் எந்தவித தடையுமின்றி மாற்று ஏற்பாடுகள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்பதும் இந்த அரசாணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.. அத்துடன் இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது.
எனவேதான், இந்த அறிவிப்புக்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் தன்னுடைய மனப்பூர்வமான நன்றியை அரசுக்கு தெரிவித்துள்ளார்...!!












Click it and Unblock the Notifications