சர்ப்ரைஸ் தந்த மின்சார வாரியம்.. ஒரே நேரத்தில் 3 இணையதள சேவை.. இதுல இத்தனை வசதிகளா.. பலே மின்வாரியம்
சென்னை: தமிழகம் முழுவதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மேற்கொள்கிறது. www.tnpdcl.org என்ற இணையதள முகவரியில் தான், மின் வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஒரே நேரத்தில் 3 வகையான இணைய தள சேவையை மின்சார வாரியம் துவங்கியிருக்கிறது.. இந்த 3 இன்டர்சேவையையும் தமிழக அமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.. இது மின்நுகர்வோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.
தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதேசமயம், தற்போது வெயில் காலம் என்பதால், மின்வெட்டு ஏற்படாத வகையில், ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு மின்பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, தனியார்களிடம் இருந்து மின் சேவை பெறப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

தடையில்லா மின்சாரம்
இப்படிப்பட்ட சூழலில், தமிழகம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகம் செய்வதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதிய மின்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்துகொண்டு, மின்வாரியத்தின் வளா்ச்சிப் பணிகள், இலக்குகள், புதிய மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
புதிய துணை மின் நிலையம்
அப்போது, மாநிலத்திலுள்ள அனைத்து அனல் மற்றும் புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் முழு திறனில் இயங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் மின்தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதால், கோடை வெயில், மழை காரணமாக மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன், அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்ட பொறியாளா்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்ய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
ஒரே நேரத்தில் 3 இணையதளங்கள்
பின்னர், மின்சார வாரியத்தின் 3 புதிய இணையதள சேவைகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார். அதாவது, தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான தமிழக பசுமை எரிசக்தி கழகம், சூரியசக்தி, காற்றாலை உள்ளிட்ட பசுமை மின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்நிறுவனத்தின், www.tngecl.org இணையதளத்தைதான், அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்திருக்கிறார்..
இதில் முதலாவது இணையதளம், மின்துறையை நவீன மயமாக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதில், பசுமை எரிசக்தி ஆதாரங்கள் குறித்த தகவல்களை வழங்கும் வகையிலான தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (டிஎன்ஜிஇசிஎல்) இணையதளமாகும்..
மின்வாரியம் - இணையதளம்
அடுத்ததாக, வாரியத்துக்கும் வழங்குநா்களுக்கும் இடையிலான தொடா்புகளை சீரமைக்கும் வகையிலான வழங்குநா் இணையதளம் அதாவது மின் வாரியத்திற்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை சீரமைக்க, vendor.tnebltd.org/appvendor/ என்ற இணையதளமும், மூன்றாவதாக, பணியாளா்களின் மனிதவள தேவைகளை நிா்வகிப்பதற்கான இணையதளமாகும்.. இந்த நிகழ்வில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.












Click it and Unblock the Notifications