"நம்பர் 1".. முகத்தில் கரியை பூசி.. "வெள்ளி டம்ளர்" தந்த "வேல் ஐயா".. செல்லப்பாண்டியன் வந்துட்டாரு

இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் பிரச்சாரம் ஆரம்பமாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா அளவுக்கு அதிகமாக நடப்பதால், தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதையொட்டிய வித்தியாசமான பிரச்சாரங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி எழுந்துள்ளது.. இதில் எதிர்க்கட்சிகளை டெபாசிட் வாங்காமல் செய்ய வேண்டும் என்று திமுகவும், மெஜாரிட்டி வாக்கு சதவீதத்தை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று திமுகவும் மும்முரமாகி உள்ளன.

இதற்காக சில "தாராளங்களையும்" தொகுதிக்குள் உலாவ விட்டுள்ளதாக தெரிகிறது.. இது சம்பந்தமான உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.

 குக்கர்கள்

குக்கர்கள்

அதாவது, ஆளுங்கட்சி ஓட்டுக்கு 6 ஆயிரம் தர திட்டமிட்டுள்ளதாகவும், தினமும் தலைக்கு 1000 ரூபாய், அசைவ பிரியாணி மற்றும் வீட்டுக்கு ஒரு குக்கர் என்று பட்டப்பகலிலேயே பட்டுவாடா நடக்கிறது என்று அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருவதுடன், அது தொடர்பான வீடியோக்கள் உள்ளதாக கூறி, அவைகளை பரவவிட்டும் வருகின்றனர்.. குறிப்பாக, ஈரோடு கிழக்கு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வீட்டுக்குவீடு திமுகவினர் வெளிப்படையாக குக்கர் கொடுத்து வருவதாகவும் புகார் கிளம்பியது. ஓட்டுக்கு ரூ4000, வீட்டுக்கு வீடு கோழி கறி, மளிகை சாமான், இந்த வரிசையில் இன்று குக்கர் என்று லிஸ்ட் போட்டு அதிமுகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

ஸ்வீட்பாக்ஸ்கள்

ஸ்வீட்பாக்ஸ்கள்

வாக்காளர்கள் குக்கர் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாம்... குக்கர் கொடுக்கப்படும் குடோனையும் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.. அதேபோல, அதிமுக தரப்பிலும் "ஸ்வீட்பாக்ஸ்கள்" விநியோகம் ஜரூராக நடப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் அதிமுக தரப்பில் கொலுசு தரப்படுவதாக செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. எனவே இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் சிவி சண்முகம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்..

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

இடைத்தேர்தல் தொடர்பாக பல புகார்கள் வந்தாலும் கூட, இதுவரை தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எந்தவொரு புகாரும் வரவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்த நிலையில், உடனடியாக தேமுதிக சார்பிலும் புகார் தரப்பட்டது. தாங்கள் கொடுத்துள்ள புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் தேமுதிக தெரிவித்திருந்தது.. "ஈரோடு மக்கள் தங்களது சொந்த வேலைக்குகூட வெளியே செல்ல முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ளனர்.. இது ஜனநாயக விரோதம்... இந்த தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 களமிறங்கியது

களமிறங்கியது

இப்படி புகார்களும், கோரிக்கைகளும் ஒருபக்கம் கூடிவந்தாலும், மற்றொருபுறம், பணப்பட்டுவாடா நடப்பதை கண்டித்தும் பிரச்சாரங்களும் நடந்து வருகின்றன. அதில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் பிரச்சார யுக்திகள்தான்.. இந்த முறையும் போட்டியில் களமிங்கி உள்ளது இந்த சங்கம்.. அதிலும் முதல் நபராக, தேர்தலில் களமிறங்கி, வேட்பாளரையும் அறிவித்தது இந்த சங்கம்தான்.. மூத்த தலைவரும், அச்சங்கத்தின் மாநில தலைவருமான ஆறுமுகம், ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார்.. விதவை கோலத்தில், வெள்ளை புடவையுடன், தலைவிரி கோலத்தில், கையில் தாலியுடன் வந்து வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தார்..

 குக்கர் - பிரியர்

குக்கர் - பிரியர்

அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் என்னுடைய மனுவை நான் வாபஸ் பெறுவேன்" என்றும் ஆறுமுகம் அதிரடியாக அறிவித்திருந்தார். தற்போது ஆறுமுகத்துக்கு "டம்ளர்" சின்னம் தரப்பட்டுள்ளது.. "குக்கர்" பிரியர்கள் குவார்ட்டர் பிரியர்களின் குடும்பங்களின் நலன்காத்திட, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தங்கள் சங்கத்திற்கு ஆதரவு தர வேண்டும்" என்ற கோரிக்கையுடன் இவர்கள் பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர்.

 வெள்ளி டம்ளர்

வெள்ளி டம்ளர்

குறிப்பாக, "டாஸ்மாக் செங்கல்" சுமந்தும், பிணக்கோலத்திலும் தொகுதி மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.. "பகுத்தறிவு மண்ணிலே பணமழை பொழிகிறது, பாட்டில் அலை வீசுகிறது, பரிசுகள் பல குவிகிறது, பத்திரிகையாளர் முகம் வீங்குகிறது, இதற்கெல்லாம் பாராமுகம் காட்டும் தேர்தலை கண்டித்து முகத்தில் கரியை பூசிக்கொண்டு ஓட்டுக் கேட்டு வருகிறார் வேட்பாளர் ஆறுமுகம்" என்ற கோஷத்துடன் ஈரோடு தொகுதியில் இச்சங்கத்தினர் வலம் வந்து கொண்டிருப்பது, அம்மக்களின் கவனத்தை ஈர்த்தும் வருகிறது..

 வெள்ளி வேலையா

வெள்ளி வேலையா

இதனிடையே, இன்றைய தினம், அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், ஈரோடு தேர்தல் பொறுப்பேற்றுள்ள பகுதிகளில் "வெள்ளி டம்ளர்" ஆண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.. ஆனால் எங்கள் சின்னம் "டம்ளர்" ஆகும்.. எங்கள் சின்னத்தையே வெள்ளியில் மக்களிடம் கொடுத்து அழகுபார்க்கும் அமைச்சர் எவ வேலுக்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. "வெள்ளி டம்ளர் தருகின்ற வேலையாவை வணங்குகிறேன்" என்று அறிக்கை வெளியிட்டு கலங்கடித்து வருகிறார் செல்லபாண்டியன்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+