கோவைக்கு நற்செய்தி.. தலைநிமிரும் "போத்தனூர்".. சபாஷ் அம்ரித் பாரத் திட்டம்.. குஷியில் கோயம்புத்தூர்
சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தின் தமிழக ரயில் நிலையங்கள் படுஜோராக தயாராகி கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், போத்தனூர் ரயில் நிலையம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, கையில் எடுத்துள்ள திட்டம்தான், "அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்" ஆகும். இதன்படி, மொத்தம் 1309 ரயில் நிலையங்களை மேம்படுத்த உள்ளன.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்படி, தமிழகத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.. இதற்காக, ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி ஏற்கனவே அடிக்கல் நாட்டியிருந்தார்.
எஸ்கிலேட்டர்கள்: இந்த அமரித் பாரத் ரயில் திட்டத்தின்படி, லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் இதில் இடம் பெறும்.
தமிழகத்தில் மட்டும் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் மேம்படுத்தப்படுகிறது..
பணிகள்: அம்ரித் பாரத் ரயில் நிலை மேம்பாட்டு திட்டப் பணிகள் துவங்கப்பட்டு, வரும் 2024 பிப்ரவரிக்குள் மொத்த பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.. விரைவில் தேர்தல் வரப்போவதால், இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறாம்... அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் 2வது கட்டமாக, 44 ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தும் பணிகளுக்கு, பிரதமர் மோடி, இந்த மாதம் இறுதியில் அடிக்கல் நாட்ட உள்ளதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கார் பார்க்கிங் : அதுமட்டுமல்ல, கான்கிரீட் ரோடு, வடக்கு பக்கத்தில் இருந்து போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்குள் வர நுழைவுவாயில், பயணிகளின் டூவீலர் மற்றும் கார் நிறுத்த பார்க்கிங் வசதி, வெளியே சிறிய பூங்கா, உள்ளே பயணிகள் அமர்வதற்கான சொகுசு இடம், AC ஓய்வு அறை, லிப்ட், கோச் டிஸ்ப்ளே போர்டு, எல்இடி விளக்குகள், எல்இடி டைம் டேபிள் டிஸ்ப்ளே போர்டு, நடைமேடைகளில் கூரைகள், நகரும் படிக்கட்டுகள், பேட்டரி கார் வசதிகள் இங்கு வரப்போகின்றன.
தற்சமயம், போத்தனுார் வழித்தடத்தில் தற்சமயம் 38 ரயில்கள் இயக்கப்படுகின்றன.. இதில், வெறும் 14 ரயில்கள் மட்டுமே தினசரி நின்று செல்லும் நிலையில், அம்ரித் பாரத் திட்டப்பணிகள் முடிந்தபிறகு, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில் பல ரயில்கள் நின்று செல்லக்கூடும் என்று தெரிகிறது. இது பயணிகளுக்கு மிகுந்த நன்மையை பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications