கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வந்த..பல மாநில தலைவர்களுக்கு! ஸ்டாலின் தந்த எதிர்பாராத சர்ப்ரைஸ்
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் பரிசுப் பெட்டகம் ஒன்று வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் இந்த கூட்டு நடவடிக்கை குழு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கவனம் பெறுகிறது கூட்டம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சியும் பங்கேற்கிறது. கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சி முன்னாள் எம்பி உதய் சீனிவாஸ் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பது அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க மூன்று மாநில முதல்வர்கள் சென்னை வந்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
ஏன் இந்த கூட்டம்
தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.
மக்கள் தொகை அடிப்படையில்தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் நடைபெறும் கிண்டி ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ஸ்பெஷல் பரிசு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் பரிசுப் பெட்டகம் ஒன்று வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவை, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு,
‣ பத்தமடை பாய்,
‣ தோடர்களின் சால்வை,
‣ காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை,
‣ ஊட்டி வர்க்கி,
‣ கன்னியாகுமரி கிராம்பு,
‣ கோவில்பட்டி கடலை மிட்டாய்,
‣ ஈரோடு மஞ்சள்,
‣ கொடைக்கானல் பூண்டு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications